தரித்துநின்று கர்த்தர் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் STAND STILL AND SEE THE SALVATION OF THE LORD பிலதெல்பியா சபை, சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா 1957-06-29 1. நாம் சற்று நேரம் ஜெபிப்போமாக. எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சிலாக்கியமான மகத்துவமிக்க ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் ஏற்படுத்தி வைத்திருக்கிற ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுவுக்காக நாங்கள் இன்றிரவு உமக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம், பிறருக்காக செய்திருக்கிற அவருடைய மகத்தான பாடுகள், மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வருகை ஆகியவற்றின் மூலமாக இந்த ஆசீர்வாதங்கள் சாத்தியமாயிற்று. நாங்கள் உம்மிடமிருந்து கூடுதலான வார்த்தைக்காக காத்துக் கொண்டு இருக்கையில், நீர் எங்களை ஒருமிக்க ஆசீர்வதிக்க வேண்டுமென்று இன்றிரவு நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். உட்காரலாம். 2. (...ஆம். ஆமாம், அவர்கள் கனடாவில் இருக்கிறார்கள்.) இன்றிரவு இங்கே இந்தப் பிலதெல்பியன் சபையில் மீண்டும் இருப்பதென்பது அப்படிப்பட்ட ஒரு சிலாக்கியமாயுள்ளது. அது சரியே. எனக்கு மிக அதிக சத்தமில்லை, இங்கே சிறிய ஒலி அளவும் நீண்ட தூரம் போகிறது. நான்... என்னுடைய சிறிய மகன், ஜோசப்... மனைவி வரப்போகிறாள் என்று இரண்டு நாட்களுக்கு முன்பும் அவளுக்குத் தெரியாதிருந்தது, நமக்கிருக்கிற இந்த மகத்தான மழைக் காலத்தின் கீழாக அவன் வளர்க்கப்பட்டான், ஒரு புண்ணான தொண்டை. நல்லது, அவன் அப்பாவின் மகன் என்பது உங்களுக்குத் தெரியும், எனவே விளையாடிக் கொண்டும், துள்ளிக் குதித்துக் கொண்டும் இருக்கிற அவனை நான் மேலே உடையவனாய் இருக்கிறேன், மேலும் நானும் அவனோடு விளையாடிக் கொண்டிருக்கிறேன், மேலும் நல்லது, அப்போது இங்கே சாலையில் வந்து கொண்டு இருக்கும் போது, சற்று கரகரப்பான குரலை நான் பெற்றுக் கொண்டதைக் கண்டு கொண்டேன். ஆனால் ஜோசப்பைப் போன்ற ஒரு அருமையான மகன் விளையாடுவதற்கு கிடைத்தது மதிப்புமிக்கதாகவே உள்ளது. ஆனால் கர்த்தர் அவனுக்கு நல்லவராகவே இருந்தார், நாங்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்தின் பேரில் ஜெபித்து, ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வது அவருடைய சித்தமாக இருக்குமானால், அவர் காய்ச்சலை உடனடியாக நிறுத்தி விட வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்டுக் கொண்டோம். அவர் அதை நிறுத்தவில்லை. நாங்கள் ஏறக்குறைய நான்கு மணி நேரங்களாகக் காத்திருந்தோம். பிறகு நான் மறுபடியும், ‘கர்த்தாவே, நான் இதைச் செய்வது உமக்குச் சித்தமாக இருக்குமானால், இந்தக் காய்ச்சலை நிறுத்தும்’ என்று ஜெபித்தேன். உடனடியாக காய்ச்சல் நின்று விட்டது. நல்லது, அப்படியானால் நான்... அது அதற்கு மேலும் திரும்ப வரவேயில்லை. எனவே அப்படியானால் நான் சரியாக அவசரமாக புறப்பட வேண்டி இருந்த ஒரு தீர்மானத்தைச் செய்வதற்காக தேவன் அசைவாடிக் கொண்டிருந்ததாக அது இருந்தது என்பதை நான்... நான் அறிந்து கொண்டேன். எனவே நான் மிகவும் நன்றி உள்ளவனாய் இருந்தேன். 3. இப்பொழுது, நான் இங்கே சபைக்கு வந்து பேச வேண்டுமென்று சகோதரன் ஜோசப் கேட்டுக் கொண்டார், ஆகையால் முழு சுவிசேஷ கிறிஸ்தவ வர்த்தக புருஷர்களின் இந்த மகத்தான கன்வென்சன் கூட்டத்திற்காக நாங்கள் இங்கே இருந்தோம். இன்றிரவு இங்கே அவர்களில் அநேகர் அமர்ந்திருக்கிறதைக் காண்கிறேன். நான் அவர்களுக்காகவும், இன்றிரவு இங்கே பிரதிநிதித்துவம் வகித்துக் கொண்டிருக்கிற அவர்களுடைய மனிதர்களாகிய சகோ.ரோவ், மற்றும் சகோ.கோ அவர்களுக்காகவும் நான் மிகவும் நன்றி யுள்ளவனாய் இருக்கிறேன், ஓ, அங்கே வெளியிலுள்ள அவர்களில் அநேகர் இன்றிரவு இங்கே ஆராதனையில் இருக்கிறார்கள். சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருக்கிற நமது சகோதரனாகிய சகோதரன் சோன்மோர் அவர்கள், என்னால் முடியவில்லை... அந்த அமெரிக்க பெயரை நான் அழைக்க முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை, என்னால் அதைச் செய்ய முடியவில்லை. மேலும் நான்... ஆனால் அநேகர் இங்கே இருக்கிறார்கள், அந்த மனிதர்களுக்காக நாங்கள் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். பட்டணத்திற்கு வெளியிலிருந்து வந்துள்ள என்னுடைய நல்நண்பர் நார்மன்ஸ் அவர்கள் இங்கேயிருக்கிறதை நான் காண்கிறேன். அதோடு கூட சகோ.சாத்மன் அவர்களையும், ஜெர்மனியிலிருந்து, அல்லது சுவிட்சர்லாந்திலிருந்து, இன்னும் சரியாகச் சொன்னால், இல்லை தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் என்னுடைய சகோதரனையும் நான் காண்கிறேன். ஓ, அவர்கள் எல்லா இடங்களிலும் இருந்தும் இங்கே வந்து இருக்கிறார்கள். நான் சுவிசேஷ சுற்றுப்பயணங்களுக்காக ஜெபர்ஸன்வில்லிலுள்ள கூடாரத்தில் எனக்கு இருந்த முதலாவது – கடைசி ஆராதனையை விட்டு போவதற்கு முன்பாக நடந்ததை நினைவு கூருகிறேன். என்னுடைய மனைவி எனக்காகக் பாடினாள், அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர், (நீங்கள் அதைக் கேட்டிருக்கிறீர்கள்.) அவர்கள் தூர தேசங்களிலிருந்து வந்துள்ளனர், ராஜாவுடன் விருந்துண்ண, அவருடைய விருந்தாளியாய் புசிக்க; இந்த யாத்திரீகர்கள் எவ்வளவாய் ஆசி ர்வதிக்கப்பட்டவர்கள்-! 4. ஜோசப் அவர்களே, உமக்கு நன்றி. அது சிகாகோவுக்கான நல்ல தண்ணீராக உள்ளது. நாங்கள் அதை ஜெபர்ஸன்வில்லில் கீழிருந்து மேலே கோருவதினால் நிறைய எடுப்போம், உங்களுடைய தண்ணீர் ஏரியிலிருந்து கிடைக்கிறது, எங்களுடையதோ கிணற்றிலிருந்து கிடைக்கிறது. ஆனால் இது ஜெபர்ஸன்வில்லினுடைய நகர்ப்புற எல்லை என்பதை நாம் எல்லாரும் அறிவோம், எனவே அது இவ்விதமாக இங்கிருந்து வெளியே போகையில், நல்லது, நீங்கள் ஏரித்தண்ணீருக்கு வந்திருக்க வேண்டும். ஆமாம். இப்பொழுது இங்கே சிகாகோவில், ஷெர்மன் ஓட்டலில் நடக்கும் இந்த மகத்தான கன்வென்சன் கூட்டத்தில் இருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தேவனுடைய ஆசீர்வாதங்கள் இந்த கூட்டத்தின் மேல் – இந்த ஆராதனையில் தங்கியிருக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம், மேலும் கிறிஸ்தவ வியாபார புருஷர்... சகோதரன் ஜோசப் அவர்கள், ‘விளம்பரம் எதுவுமில்லை, நாம் ஒன்றாக கூடி வர முடிந்த வெறுமனே ஒரு சிறிய இடம்’ என்று சொன்னது போல. இங்கே நிறைய சபைகள் உள்ளன. நீங்கள் பாருங்கள்-? எனவே ஒன்றாகக் கூடி வரும்படியாக வெறுமனே ஒரு சிறிய இடம், ஜோசப் அவர்களை நான் மிக நன்றாக அறிந்திருக்கிறேன். கரகரப்பான குரலுக்காகவும் மற்றவைகளுக்காகவும் இன்றிரவு அவர் என்னை மன்னித்து விடுவார். 5. நான் சற்று நேரம் பேசி விட்டு, அதன் பிறகு வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகலாம் என்று நினைத்தேன். நாளை பிற்பகலில், கர்த்தருக்குச் சித்தமானால், நாளை பிற்பகல், 2 மணிக்கு ஒரு சுவிசேஷ ஆராதனை எனக்கிருக்கிறது. அங்கே வேறு ஏதாவது ஆராதனை இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை... நாளை பிற்பகல் நடக்கும் கூட்டத்தைப் பற்றி எனக்குத் தெரியும். நித்திய ஜீவனின் பேரிலான ஒரு சுவிசேஷ செய்தி எனக்கிருக்கிறது. எனவே நீங்கள் சுற்றிலும் உள்ளவர்களாயிருந்து, வர விரும்பினால், உங்களைக் கொண்டு இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். மீண்டும் நாளை இரவில், நாங்கள் அநேகமாக மறுபடியும் வியாதியஸ்தருக்காக ஜெபிப்போம், அது நாளை இரவு. அதன் பிறகு கன்வென்சன் கூட்டம் திங்கள் கிழமை துவங்குகிறது, அதிகாரப்பூர்வமாக திங்கள் கிழமை துவங்குகிறது. எனவே நான் இங்கே தேவனுடைய வார்த்தையிலிருந்து வாசிக்கும் போது, நீங்கள் எனக்காக ஜெபிக்கையில், இப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, வெறுமனே ஒரு-ஒரு சிறு பொருள், நாம் அதை ஒரு பொருள் என்று அழைக்கையில், ஒரு பின்னணிச் சூழலுக்காக கர்த்தர் நமக்கு என்ன கொடுப்பார் என்று பார்ப்போம். மேலும் நான் பின்னால் நோக்கிப் பார்த்து, லூயிவில்லிலிருந்து வந்துள்ள என்னுடைய நல்நண்பராகிய சகோ.ஜான்-ஓ’பினான் அவர்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சி உடையவனாய் இருக்கிறேன், அவர், அன்றொரு நாளில் நம்மோடு கூட மேலே வந்திருந்தார், மேலும் நான்... நாங்கள் இந்தக் காலையில் எங்கோ இருக்கும் கூட்டத்தில் குழம்பிப் போனோம், சகோதரன் ஜான் அவர்களே, நான்-நான் உம்மைத் தவற விட்டு விட்டேன். ஆனால் இன்றிரவு இந்த ஆராதனையில் சகோ.ஓ-பினான் அவர்களைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 6. நான் 2-நாளாகமம்.20:17-லிருந்து வெறுமனே ஒரு பாகத்தை, அல்லது ஒன்றிரண்டு வார்த்தைகளை வாசிக்க விரும்புகிறேன். ... தரித்துநின்று கர்த்தர் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்;... நான் அதை ஒரு பொருளுக்காக உபயோகிக்க விரும்புகிறேன்: அது 2-நாளாகமம்.20:17. ‘தரித்து நின்று கர்த்தர் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்.’ 7. இந்த வேதவாக்கியங்கள் நமக்கு மிகவும் பழக்கமான வேதவாக்கியங்கள் தான், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாட்களிலே, ஜனங்கள் ஓய்வே இல்லாமல் பரபரப்போடு அவ்வளவு பிஸியாக இருப்பதைக் காண்கிறோம். ஜனங்கள் எப்படியாக தாங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலேயே, யெகூவைப் போன்று ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு வீதிகள் வழியாக காரோட்டிக்கொண்டு சென்று, கவனக் குறைவினால், வேகமாக ஒன்றோடொன்று மோதி, சிதைந்து சீர்குலைந்து போகிறார்கள். அது அவ்வளவு அதிக பதட்டமான (neurotic age) ஒரு காலமாக இருப்பதாகத் தோன்றுகிறது. நாம் எல்லாரும் அப்படியே சற்று நேரம் தரித்து நிற்கும்படியான நேரமாக இது இருக்கிறது என்று நினைக்கிறேன், இது ஒருவிதத்தில் சாமான் பட்டியலில் எல்லா பொருட்களும் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டிய நேரமாகும். நாம் எங்கு தான் போய்க் கொண்டு இருக்கிறோம்-? ஏன், ட்வைட் மூடியும் வழக்கமாக இங்கே இந்த இதே பிரயாணங்களை இதன் வழியாக மேற்கொள்ளத்தான் செய்தார், அவர் அநேகமாக ஒரு குதிரையிலும் இலேசான ஒற்றைக் குதிரை வண்டியிலும் பிரயாணம் செய்தும், நாம் இன்று செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும் சிறந்த வேலையைச் செய்தார். தாத்தாவும், பாட்டியும், அவர்கள் எப்படியாக பல இடங்களுக்குச் சென்றார்கள், ஆனால் நாம் அப்படியே இவ்வளவு அவசர அவசரமாகப் பிரயாணம் பண்ணியும் எங்கேயும் போகாமல் இருப்பது போன்று தான் தோன்றுகிறது. 8. இப்பொழுது, நாம் சற்று முன்பு வாசித்த இந்தக் குறிப்பிட்ட வேத வாக்கியத்தில், ஒரு பெரிய நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்த இடமாக அது இருந்தது. படையெடுத்து வந்து கொண்டிருந்த ஒரு பெரிய இராணுவம் அங்கே இருந்த காரணத்தினால், ஜனங்கள் எல்லாரும் பயந்து கொண்டும், நிலைகுலைந்தவாறும் இருந்தார்கள். மோவாபியர்கள் யூதாவுக்கு விரோமாய் வந்து கொண்டிருந்தார்கள். அது ஒரு கஷ்டமான நேரமாக இருந்தது. ஜனங்கள் முழுவதுமாக கலக்கம் அடைந்திருந்தார்கள்; எந்த வழியாகப் போவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தேவனுடைய நீதிமானாகிய யோசபாத் எவ்வாறு கர்த்தரை சேவிப்பது என்று தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான். இப்பொழுது, படை எடுத்துத் தாக்கும்படி வந்து கொண்டிருந்த ஒரு பெரிய இராணுவம் அங்கே இருந்ததின் நிமித்தமாக ஜனங்கள் முழுவதுமாக கலக்கமடைந்திருந்தனர். நாம் எல்லாரும் அநேக நேரங்களில், தரித்து நிற்க முடியாமல், பதட்டமடையும் ஒரு நிலைக்கு ஆளாகிறோம். நன்மையான ஏதோவொன்றை நாம் செய்யத் தொடங்கும் போது, தொல்லை நேரிடுவதை நாம் காண்கிறோம். ஆனால் அது தேவனுடைய திட்டத்தைக் கவிழ்த்துப்போட முயற்சிக்கும் பிசாசாகும். நம்முடைய தனிப்பட்ட ஜீவியங்களில் நாம் அதைக் காண்கிறோம். நம்முடைய சபை உலகத்தில் நாம் அதைக் காண்கிறோம். நம்முடைய தேசிய விவகாரங்களிலும் நாம் அதைக் காண்கிறோம். நீங்கள் அதை எல்லா இடங்களிலும் காணலாம். அப்பொழுது நாம் சரியானதைச் செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது, தவறானது எப்போதுமே நடக்கிறதை நம்மால் அறிய முடியும். ஆனால் அதை ஜெயம் கொள்வதற்கான வழி யாதெனில், நீங்கள் எந்த வழியில் போக வேண்டுமென்று தேவன் வைத்திருக்கிற வழி எதுவோ, அந்த வழியை உங்கள் இருதயத்தில் சிந்தித்துக் கொண்டு, அந்த வழியோடு தரித்திருப்பது தான், தேவன் வைத்திருக்கிற அந்த வழி தான் மிகச்சிறந்த வழி ஆகும். 9. அவ்விதமாய், அந்த மகத்தான நாளில் - ஒரு குழப்பமான வேளையில், கர்த்தர் பேசினார். அருகில் நின்று கொண்டிருந்த ஒரு சிறிய தீர்க்கதரிசி வழியாக அவர் பேசினார், அவன், ‘தரித்து நின்று, தேவன் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். இந்த யுத்தத்தை நீங்கள் செய்ய வேண்டியதில்லை’ என்று கூறினான். ஆனால் அவர்கள் ஒருமித்து ஜெபம் பண்ணிக் கொண்டு இருந்த காலம் வரையில், அது தேவனுடைய யுத்தம் தான். அதே காரியம் இன்றிரவுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். அங்கே மகத்தான சபை ஜனங்களும், மகத்தான சபைகளும் ஒருவருக்கொருவர் அதிகமாய் கவலைப்பட்டு, அமைதி அற்றவர்களாய், பதட்டமடைந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான வேளையில், ஸ்தாபன தடைகள் நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது, நாம் இப்பக்கத்திலிருந்தும் அப்பக்கத்தில் இருந்தும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம், இதுவே தரித்து நிற்பதற்கான நேரம். இது தேவனுடைய யுத்தமாக இருக்கிறது. துவக்க முதலே இது நம்முடைய யுத்தம் அல்ல. நாம் தரித்து நிற்க வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார். தேவன் எதையாகிலும் செய்ய ஆயத்தப்படும் போது, வழக்கமாக தம்முடைய ஜனங்கள் தரித்து நிற்க வேண்டுமென்று அவர் கட்டளை இடுகிறார். 10. ஒரு சமயம் சோதனையானது நடந்து கொண்டு, உடன்படிக்கையின் ஜனங்கள் எகிப்தை விட்டு வெளியே வந்த போது, அவர்கள் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டார்கள், அப்போது மோசே மகத்தான தலைவனாய் இருந்தான்; வேவுகாரர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் போயிருந்தார்கள், பின்பு அவர்களில் பத்து பேர் திரும்பி வந்து, ‘நம்மால் அதைப் பிடிக்க முடியாது. அவர்கள் மிகவும் பெரியவர்கள்; நாமோ மிகவும் சிறியவர்களாய் இருக்கிறோம்’ என்றார்கள். ஆனால் காலேப், யோசுவோ என்ற இரண்டு மனிதர்கள் அங்கே இருந்தார்கள், அவர்களோ... என்று கூறினார்கள். அவர்கள் ஜனங்களை அமைதிப்படுத்தினார்கள். முதலாவது காரியமாக, ஒருவன் இதையும், ஒருவன் அதையும் சொல்லிக் கொண்டு இருந்தனர். ஒருவன், ‘நீ ஏன் எங்களை வெளியே கொண்டு வந்தாய்-?’ என்று சொல்லிக் கொண்டு இருந்தான். அதுவே இன்றுள்ள நிலைமைகளாக இல்லாதிருந்தால், அது எனக்குத் தெரியாது. ‘நாங்கள் ஏன் இதைச் செய்தோம்-? நாங்கள் ஏன் அதைச் செய்கிறோம்-?’ காலேப், மோசேக்கு முன்பாக ஜனங்களை அமைதிப்படுத்தி, அவன், ‘நாம் போய் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்’ என்றான். ஏனென்றால் அது நீங்கள் எதை நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அவர்களில் சிலர் தடையையும், மகா இராணுவங்களையும், மகத்தான மதில் சுவர்களையும், பெரிய இராட்சத அளவுடைய ஜனங்களையும் நோக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் காலேப்போ தேவனுடைய வாக்குத் தத்தத்தை நோக்கிக் கொண்டிருந்தான். காலேப் தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஜனங்களுக்கு சொல்லக்கூடும் முன்பு, அவன் அவர்களை அமைதிப்படுத்த வேண்டியிருந்த வேளையானது வந்திருந்தது. இன்றைக்கும் அதே காரியம் தேவையாயிருக்கிறது என்று நினைக்கிறேன், ஜனங்கள் தரித்து நின்று, தேவன் என்ன வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்று பார்க்க வேண்டியது அவசியம். தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாளாக இது இருக்கிறது. இவைகள் நிச்சயமாக இருந்தாக வேண்டும். அவைகள் வர வேண்டியதாய் இருக்கிறது. எனவே நாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பார்த்து, தரித்து நின்று, தேவனுடைய இரட்சிப்பு அதற்குள்ளாக அசைவாடுவதை கவனிக்க வேண்டும். தேவன் எப்போதுமே தம்முடைய வார்த்தையின்படி கிரியை நடப்பித்து, ஜனங்களை அமைதிப் படுத்துகிறார். 11. தேவன் எதையாவது செய்ய ஆயத்தமாகும் போது, ஜனங்கள் முழுவதுமாக கலக்கம் அடைகிறார்கள். அவர்கள் தங்களுடைய பிரயாணத்தில் கலக்கமடைந்ததன் காரணம் என்ன என்றால், அங்கே சென்ற பல ஜாதியான அனேக ஜனங்களின் (mixed multitude) நிமித்தமாகத் தான். அப்போது சோதனையின் நேரம் வந்தது. ஓ, நீங்கள் இதைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், தேவன் அசைகிற ஒவ்வொரு முறையும், அங்கே வழக்கமாக பல தரப்பட்ட ஜனங்கள் (mixed multitude) இருக்கிறார்கள்; அது எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்து, பலதரப்பட்ட ஜனங்களை உருவாக்கி விடுகிறது. தேவன் ஒரு அசைவை ஏற்படுத்துகிற போது, அதனோடுகூட எல்லாவிதமான மதக்கொள்கைளும் மற்றும் ஒவ்வொன்றும் வருகிறதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். ஆனால் சோதனையின் நேரம் வந்தது. தேவனிடம் வருகிற ஒவ்வொரு குமாரனையும் குமாரத்தியையும் அவர் சோதிக்கிறார், பாரபட்சமே இல்லை. அவர்களை நிரூபிக்கும்படியாக சோதனையின் நேரத்தை தேவன் அவர்களுக்குக் கொடுக்கிறார். 12. இப்பொழுது, தேவன் பேச ஆயத்தமான போது, அவர் ஜனங்களை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது. ஒரு நாள் அவர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கும் வழியில், அவர்கள் அங்கு போய்ச் சேருவதற்கு முன்பாக, தேவன் தம்முடைய மகிமையைக் காண்பிக்க விரும்பினார். தேவன் தம்முடைய ஜனங்கள் தரித்து நின்று, அதற்காக எதிர்ப் பார்த்துக் கொண்டிருக்கும் போது மாத்திரமே, அவரால் தம்முடைய மகிமையைக் காண்பிக்க முடியும். இன்று நம்முடைய சபையோடும் உள்ள காரியம் அது தான். ஜனங்கள் தரித்து நின்று தேவனுடைய மகிமைக்காக காத்திருப்பதில்லை. ‘தரித்து நின்று, தேவனுடைய மகிமையைக் காணுங்கள், அல்லது தேவன் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்’ என்று வேத வாக்கியத்தில் எழுதப்பட்டுள்ளது. 13. இப்பொழுது, அவர்கள் செங்கடலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள், என்னவொரு நேரம். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் கொண்டிருந்த இந்த உடன்படிக்கையின் ஜனங்கள், அவர்கள் அந்த வாக்குத்தத்தத்தின் பேரில் திடமாக நின்று கொண்டிருந்தார்கள்... ஜனங்கள் தேவனுக்காக திடமாக நிற்கும் போது, அதைக் காண்பதென்பது மிகவும் வினோதமாக உள்ளது, அப்போது பிசாசு அவர்களுடைய வழியில் தன்னால் எறிய முடிந்த எல்லாவற்றையும் வீசி எறிவது போன்று தோன்றுகிறது. ஆனால் தேவனோ அந்த வழியினூடாக ஒரு பாதையை உண்டாக்குகிறார். நான் தேவனுக்கு முன்பாக எப்பொழுதாவது சாட்சி கூறின என்னுடைய மிகப் பெரிய அனுபவங்களில் சில யாதெனில், நான் கீழேயோ, அல்லது சுற்றிலுமோ போக முடியாத ஒரு நிலையை அடைந்த போது தான், ஆனால் அப்போது அப்படியே தரித்து நின்று விடுவேன். தேவன் எப்படியாவது அதனூடாக ஒரு வழியை ஏற்படுத்துகிறார். அவர் இதுவரையிலும் அதைச் செய்யத் தவறினதில்லை, அவர் ஒருபோதும் தவறிப் போக மாட்டார். தேவனால் தவறிப் போக முடியாது. 14. இந்த இஸ்ரவேல் புத்திரர்கள் இச்செங்கடலை அடைந்த போது இருந்தது போன்றே அது தோன்றியது, அப்போது அக்கினி ஸ்தம்பம் அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தது, பார்வோனுடைய சேனையானது அவர்களுக்கு பின்னால் இருந்தது, மலைகளும் சமுத்திரமும் அவர்களை தடுத்து நிறுத்தினது... அணி வகுத்து வந்து கொண்டு இருக்கும் ஒரு பெரிய இராணுவத்தில் ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக இருந்த இந்த கொஞ்ச ஜனங்களுக்காக இயற்கை எல்லாம் கண்ணீர் விட்டுப் புலம்பினது... ஆனால் சில சமயங்களில் தேவனுடைய பாதையானது சரியாக அப்படிப்பட்ட இடங்களினூடாக வழி நடத்துகின்றது. தேவன் தம்முடைய வல்லமையைக் காண்பிக்க விரும்பினார். தம்முடைய வல்லமையை காண்பிக்க தேவன் பிரியமாய் இருக்கிறார். ஓ, நான் சில சமயங்களில் என்னுடைய சிறிய ஜோசப்பையோ, அல்லது என்னுடைய சிறிய மகள்களில் ஒருத்தியையோ எடுத்து, அவர்களோடு பேசும்படியாக நான் உட்காரும் போது, அவர்களை என்னுடைய மடியில் தூக்கி வைத்துக்கொள்கிறேன், அது என்னை எவ்வாறு உணரச்செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. அவர்களில் ஒரு பிள்ளை, ‘அப்பா, உங்களுடைய புய பலத்தைக் (muscle) காட்டுங்கள், பார்ப்போம். ஓ, உங்களுக்கு அவ்வளவு பெரியதொரு புயம் (big muscle) உள்ளது’ என்று கூறுகின்றது. அங்கே அதிக புயபலம் இல்லை, ஆனால் அவர்கள் அவ்வாறு நினைக்கிற காலம் வரையில், அது என்னை நன்றாக உணரச் செய்கிறது. நம்முடைய பரலோகப் பிதாவும், தமக்கு புயபலம் (muscles) உள்ளதென்று தமது பிள்ளைகள் அறிய வேண்டுமென்று விரும்புகிறார். அவர்களுக்காக காரியங்களைச் செய்ய அவரால் முடியும். சில சமயங்களில் நான் ஒரு உரையாடலை (சம்பாஷணையைக்) குறிப்பிடுகிறேன், அப்போது அது அதற்கு வழிநடத்த வேண்டியிருக்கிறது. அவர்கள் அதைக் கூறுவதைக் கேட்பது எனக்குப் பிடிக்கும். 15. நான் வழக்கமாக குத்துச்சண்டைக்காரனாக இருந்திருக்கிறேன். எனக்கு இப்பொழுது வயதாகிக் கொண்டிருக்கிறது, நான் கொழுப்புள்ளவனாகவும், சுருக்கம் விழுந்து உரமற்று பலவீனமாகவும், முதுமையினால் தளர்வுற்றவனாகவும் ஆகிக் கொண்டிருக்கிறேன், ஆனால் நான் வழக்கமாக இருந்தது போன்றே மீண்டும் இருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கவே நான் இன்னும் விரும்புகிறேன். ஆனால் அங்கே தேவனைக் குறித்த ஒரு காரியம் உண்டு, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். அவருக்கு வயோதிபம் என்று எதுவுமில்லை. அவர் நித்தியமானவராய் இருக்கிறார். அது மட்டுமல்ல, ஆனால் அவரை ஏற்றுக் கொள்ளுகிற ஒவ்வொருவரும் அவரோடு கூட நித்தியமானவர்களாக ஆகி விடுகிறார்கள். அங்கே ஒரே ஒரு நித்திய ஜீவன் தான் உண்டு, தேவன் மட்டுமே அதை உடையவராய் இருக்கிறார். நாம் தேவனுடைய நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும் போது, நாம் தேவனோடு கூட நித்திய மானவர்களாக ஆகிறோம். துவக்கமுள்ள எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. தேவனுக்கு துவக்கம் இல்லாதிருந்தது, அவருக்கு முடிவும் கிடையாது. அவர் என்றென்றும் நித்தியம் உள்ளவராயிருக்கிறார். 16. அவர்கள் அங்கே செங்கடலை அடைந்த போது, தேவன் தம்முடைய வல்லமையைக் காண்பிக்க விரும்பினார். எனவே செங்கடல் தரித்து நின்று, அதுதானே மதிலாக எழும்பி நிற்க, உடன்படிக்கையின் ஒரு சிறு கூட்ட பரிசுத்த உருளையர்கள் அதன் கொங்கை வழியாக வெற்றியை நோக்கி அணிவகுத்து செல்கையில், அது அசையாமல் நிமிர்ந்து நின்றது, அவர் அந்தச் செங்கடலை உடையவராய் இருந்தார். நீங்கள், ‘அது பரிசுத்த உருளையர்களா, சகோ.பிரன்ஹாமே-?’ என்று கேட்கலாம். ஆமாம், அவர்கள் பரிசுத்த உருளையர்களாக இருந்தார்கள். அவர்கள் மறுகரையை அடைந்து, தேவன் செய்திருந்ததைக் கண்ட போது, அவர்கள் ஒரு கூட்ட பரிசுத்த உருளையர்களைப் போன்று நடந்து கொண்டு, ஒருவர் ஆவியில் பாட, மற்றொருவர் ஆவியில் நடனமாட, தம்புருக்களை வாசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் தரித்து நின்று, அவர் தம்முடைய ஜனங்களுக்கு செய்யும் விடுதலையைக் காண்பிப்பதை பார்க்கும்படியாக, தேவன் அந்த செங்கடலை வைத்திருந்தார். இன்று மாத்திரம் அவருடைய ஜனங்கள், அவர் வாக்குத்தத்தம் பண்ணினதைக் காணும்படி தரித்து நில்லுங்கள் என்று அவர் சொல்வதைக் கவனமாய்க் கேட்பார்களானால், இன்று அவர்களுக்கு அதே காரியத்தை அவர் காண்பிக்க விரும்புகிறார், தம்முடைய ஜனங்களுடைய பாவம், சந்தேகம் என்ற அடிமைத் தனத்திலிருந்தும், பதட்டத்திலிருந்தும், வியாதிகளிலிருந்தும் விடுவிக்க அவர் விரும்புகிறார். இயேசு எதற்காக மரித்தாரோ அந்த ஒவ்வொரு மீட்பின் ஆசீர்வாதங்களும் ஜனங்களுக்கு சொந்தமானது. அது உங்களுடையது. தேவன் ஏதோவொன்றைச் செய்வதைக் கவனித்துப் பார்க்கும் படியாக அவர் சமுத்திரத்தை அமரப் பண்ணும் பொருட்டு அதை உடையவராய் இருந்தார். 17. அதன் பிறகு ஒரு நாள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமானது ஜனங்களுக்கு வாக்கு அளிக்கப்பட்டிருந்த போது, அவர்கள் கடினமாக யுத்தம் செய்து கொண்டிருந்தனர். அந்த யுத்தத்திற்கு யோசுவா தலைமை தாங்கினான். சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. தேவன் தாம் யார் என்று தமது ஜனங்களுக்கு காண்பிக்க விரும்பினார். எனவே, பூமியானது அசைகையில், அல்லது அது நிற்கையில், அல்லது அது எதுவாக இருந்தாலும் அவ்வாறு இருக்கையில், தேவன் தம்முடைய வல்லமையை காண்பிக்கும் மட்டுமாக, சூரியன் தரித்து நின்றது, அந்த சூரியனை அவர் உடையவராயிருந்தார். அவர் சூரியனை தரித்து நிற்கப் பண்ண முடிந்தது. ‘சூரியனே, தரித்து நில். நான் ஒன்றைச் செய்யப் போகிறேன். செய்ய வேண்டுமென்று நான் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணினதை சரியாகச் செய்து கொண்டு இருக்கும் ஒரு ஜனங்களிடம் என்னுடைய வல்லமையை நான் காண்பிக்க விரும்புகிறேன்.’ ஓ, நாம் இன்றும் அந்த அதே தேவனையே சேவிக்கிறோம் என்பதை அறியும் போது, இது என்னவொரு ஆசீர்வதிக்கப்பட்ட சிலாக்கியமாயுள்ளது. அவர் தம்முடைய வல்லமையை காண்பிக்கும் போது, அவர் எல்லாவற்றையும் தரித்து நிற்கும்படி செய்வார். 18. ஒரு நாள் தேவனுடைய நித்தியமான ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின் மேல் திடமாக நின்ற ஒரு தீர்க்கதரிசி அங்கே இருந்தான். அவன் தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்து, தேவனால், அவனை விடுவிக்க முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான். இராஜா அவனை சிங்கங்களின் கெபிக்குள்ளே போட்டான், அங்கே சிங்கங்களும் புலிகளும் காட்டு மிருகங்களும் இந்த இதே நோக்கத்திற்காக பசியாயிருந்தன. சிங்கங்கள் தீர்க்கதரிசியை நோக்கி வரத் தொடங்கின, அவர் தம்முடைய தீர்க்கதரிசிக்கு தம்முடைய வல்லமையைக் காண்பிக்கையில், தேவன் முழு இரவும் அவைகளை தரித்து நிற்கச் செய்தார். சிங்கங்கள் தரித்து நின்றன. 19. ஒரு நாள் சூளையின் கடுமையான உஷ்ணத்தினால் அவர்கள் சில ஜனங்களை சுட்டெரித்துப் போடப் போவதாக இருந்தனர். அப்போது தேவன் தம்முடைய வல்லமையைக் காண்பிக்க விரும்பினார். அவர் தமது கற்பனைகளைக் கடைபிடித்த தமது குழுவாகிய தம்முடைய சபையோடு ஒரு உரையாடலைச் செய்து கொண்டிருக்கையில், அவர் அந்த அக்கினியைத் தரித்து நிற்கப் பண்ணி, அது அசையாமல் நிமிர்ந்து நின்றது. அவர்கள் வெளியே வந்த போது அவர்கள் மேல் அக்கினியின் மணம் கூட இல்லை. அந்த உஷ்ணத்தையும் அக்கினியையும் தேவன், தரித்து நிற்கச் செய்து, தாம் காண்பித்துக் கொண்டு இருந்ததை கவனிக்கும்படி செய்தார். 20. ஒரு நாள் கடலில் ஒரு புயல் வந்து, அலைகள் ஒரு சிறு படகை சுக்குநூறாக கிழித்தெறிய ஆயத்தமாயிருந்த போது, அங்கே அந்தப் படகின் பின்புறத்தில் ஒரு கலிலேயர் தனியாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். ஓ, அவர்கள் பதைபதைப்போடு கலக்கத்திற்கு ஆளானார்கள், அந்த விசுவாசிகள் எல்லாரும் பயமடைந்து, கலக்கம் அடைந்திருந்தார்கள். அப்போது தேவன் தம்முடைய வல்லமையைக் காண்பிக்க விரும்பினார். அவர் அந்தப் படகின் சுக்கான் (helm) இருக்கும் இடத்திற்கு நடந்து சென்று, தமது காலை அதன் மேல் வைத்து, வானங்களை நோக்கி ஏறெடுத்து, காற்றைப் பார்த்து, ‘இரையாதே, அமைதலாயிரு’ என்றார். தேவ குமாரன் தம்முடைய சிறு சபையோடு கூட கடலில் பிரயாணம் செய்கையில், காற்றும் அலைகளும் அசையாமல் நின்றன. காற்றையும் அலைகளையும் தேவன் தரித்து நிற்கும்படி செய்தார். அவர், தம்முடைய வல்லமையைக் காண்பிக்க விரும்புகிறார். அவர் தம்முடைய – தம்முடைய சர்வவல்லமையைக் காண்பிக்க விரும்புகிறார். 21. ஒரு நாள் குருடான வயது சென்ற ஒரு பிச்சைக்காரன் எரிகோவின் மதில்களருகே உட்கார்ந்திருந்தான், தேவனை அவருடைய வாக்குத்தத்தத்தில் எடுத்துக்கொண்ட மகத்தான மனுஷர்கள் அங்கே பூமியில் இருந்த போதுள்ள கடந்து போன நாட்களைக் குறித்து அவன் தன்னுடைய இருதயத்தில் கனவு கண்டு கொண்டிருந்தான் என்பதில் சந்தேகமில்லை. அவன் வழக்கமாக தன்னுடைய வாலிப யூத தாயாரின் கரங்களில் இருந்து, அவள் அவனை முத்தமிட்ட போது, அவனுடைய சிறு கண்கள் வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல அவ்வளவு பிரகாசமாக இருந்த போது, அவன் ஒரு சிறு பையனாக இருந்த நேரத்தை அவன் பின்னால் சிந்தித்துக் கொண்டிருந்தான், அவன் எப்படியாக இரவில் அந்த மகத்தான நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பான் என்பதை அவனால் நினைவுகூர முடிந்தது, பூக்கள் நிறைந்த அந்த யூதேயா மலைகளை அவனால் எப்படியாக காண முடிந்து, அந்த மகத்தான யோசுவா அங்கே எரிகோ மதில்களுக்கு அப்பால் நின்று கொண்டிருந்த போது, கர்த்தருடைய சேனையின் அதிபதியை சந்தித்த கதைகளைப் பற்றி தன்னுடைய தாயார் பேசுவதை அவனால் எப்படியாக கேட்க முடிந்தது. தேவன் ஜனங்களை அவர்களுக்கு நியமிக்கப்பட்ட இடத்திற்குள் கொண்டு வரும்படிக்கு தம்முடைய வல்லமையைக் காண்பிக்கையில், அவர் ஒரு நாள் எப்படியாக யோர்தானைத் தரித்து நிற்கப் பண்ணினார். சூனேமிய ஸ்திரீயைக் குறித்தும் மரித்துப் போன அந்தச் சிறு குழந்தையைக் குறித்தும் உள்ள அந்தக் கதைகளைக் கேட்பதை அவன் எவ்வளவாக விரும்பினான், தேவன் மரணத்தைத் தரித்து நிற்கப் பண்ணின போது, ‘நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்’ என்பதை அவரால் காண்பிக்க முடிவது வரையில் தொடர்ந்து அது பேசாமல் இருக்கும்படி செய்தார். எல்லாமும் அவருக்குக் கீழ்ப்படியும்படி அவர் செய்கிறார். அந்தக் கதைகளை அவன் விரும்பினான். ‘ஓ, அது அநேக வருடங்களுக்கு முன்பு நடந்தது’ என்று அவன் அங்கே உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கையில். ஒரு சத்தம் வருகிறது. அவர்கள், ‘நாசரேத்தூர் இயேசு வருகிறார்,’ என்று கூறினார்கள். தேவன் தம்முடைய அன்பை ஒரு குருடான பிச்சைக்காரனுக்குக் காண்பிக்க விரும்பினார். அவர் அப்படியே நேற்றும் இன்னும் என்றும் மாறாதவராக இருந்தார் என்பதை, ஊளையிட்டுக் கொண்டிருக்கும் அந்த கலகக்காரக் கூட்டத்துக்குக் காண்பிக்க தேவன் விரும்பினார். இயேசு தரித்து நின்று, ‘அவனை இங்கே அழைத்து வாருங்கள்’ என்று கூறினதாக வேதாகமம் கூறுகிறது. தேவன் தம்முடைய வல்லமையைக் காண்பிக்கும்படி தரித்து நிற்கும் பொருட்டு, தமது சொந்த குமாரனை நிறுத்தினார். தேவன் தம்முடைய வல்லமையைக் காட்டும்படி தம்முடைய குமாரன் தரித்து நிற்கும்படியாக அவரை நிறுத்த வேண்டி இருந்திருக்குமானால், குழப்பத்தோடு நடுங்கி, கலக்கமடைந்தவர்களாய், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், இன்னும் எவ்வளவு அதிகமாக நாம்... நிற்க வேண்டும். 22. [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] வார்த்தையை நிறைவேற்றும் படியாக, ஜனங்களுக்கு அதைக் காண்பிக்க, அவர் காண்பிக்க வேண்டியிருந்ததினால் அல்ல, ஆனால் வார்த்தை நிறைவேறியாக வேண்டும். தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றவும், தமது குமாரனுடைய மேசியா என்ற ஸ்தானத்தை முத்திரையிடவும் அவர் விரும்பினார். அங்கே ஒரு மனிதன் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, கல்லறையில் கிடந்து, துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தான். தோல் புழுக்கள் அவனுடைய சரீரம் முழுவதும் ஊர்ந்து கொண்டிருந்தன. எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிற்று. ஆனால் நாம் விரும்பத்தக்க அழகு அவருக்கு இல்லை என்று அங்கே கூறப்பட்டிருந்த ஒரு சிறிய மனிதரை நான் காண்கிறேன், அவர் தம்முடைய சிறிய வளைந்த தோள்களை நிமிர்த்தி, ‘நான் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்’ என்றார், தேவனே அதைக் கூறினார்.‘ என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் ஒருபோதும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா’ என்றார். அதற்கு அவள், ‘ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வர வேண்டிய தேவ குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்’ என்றாள். அந்த விசுவாச அறிக்கையின் பேரிலும், தேவ குமாரனிடத்தில் அவளுக்கிருந்த விசுவாசத்தின் பேரிலும், தேவன் தம்முடைய வல்லமையைக் காண்பிக்கப் போவதாக இருந்தார். நான்கு நாட்கள் பிரயாணத்தில் இருந்த ஒரு மனிதனுடைய ஆத்துமா, அது வெளியே பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால்; (space) அதோ அங்கிருக்கிற ஏதோவொரு இடத்தில் இருந்தது, அவர் அந்த மனிதனை மீண்டும் ஜீவனோடு உயிர்த்தெழும்படி செய்கையில், அவர் அந்த மரண தூதனை தரித்து நிற்கப் பண்ணினார்; அழிவு அதன் எஜமானை அறிந்திருந்தது. மரித்து நான்கு நாட்களான ஒரு மனிதன் தன்னுடைய காலூன்றி எழுந்து நின்று மீண்டும் ஜீவித்தான். தேவன் மரணத்தை தரித்து நிற்கப் பண்ணினார். அது மட்டுமல்ல, ஆனால் இந்த உயிர்த்து எழுதலில் அவர் தம்முடைய மேசியா ஸ்தானத்தை நிரூபித்தார். 23. இந்த உலகமானது அதிகமாக பதட்டமடைகிற நிலையை அடைந்து கொண்டிருக்கிறது; சபையும் பயந்து நடுங்குகின்றது; அது குடித்து வெறித்த ஒரு மனிதன் வீட்டிற்கு வருவதைப் போன்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அது சரியே. ஆனால் இந்நாட்களில் ஒன்றில் அவள் அஞ்சி நடுங்கி குப்புற விழப் போகிறாள், நிச்சயமாக. ஆனால் தேவன் எல்லாவற்றையும் தரித்து நிற்கும்படி செய்வார், அவர் தம்முடைய சபையை பெற்றுக்கொள்ள வரும் போது, நேரத்தையும் கூட தரித்து நிற்கப்பண்ணி, நித்தியத்திற்குள் கலந்து விடும்படி செய்வார். நான் அந்த நாளை, அந்த பரிசுத்த பாக்கியமான மணி நேரத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறேன். எனது சகோதரனே, சகோதரியே, இந்தப் பழைய அமெரிக்கா, இந்த சிகாகோ பட்டணம் தொடர்ந்து அசைக்கப்படுதலைப் பெற்றிருக்கிறது. சபையானது வெல்மர் கார்ட்னர்கள், ஓரல் ராபர்ட்ஸ்கள், அ. அ. ஆலன்கள் ஆகிய வல்லமை பொருந்திய மனிதர்களையும், கடந்து சென்ற வித்தியாசமானவர்களையும், தேசங்களைக் கடந்து போயிருக்கிற பில்லி கிரஹாம்களையும் அனுப்பி, போதுமான காலம் தரித்து நின்று, அந்த வேத வாக்கியத்தைக் கவனித்துப் பார்த்து, ஸ்தாபன கருத்துக்களை தங்களுடைய தலையை விட்டு வெளியேற்றின மனிதனை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்த போது, தேவன் தம்முடைய வல்லமையை நிரூபித்துக் காட்டி இருக்கிறார். தேவன், தாம் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்ற தமது வல்லமையை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். 24. இப்பொழுது, இவைகள் இருந்த போதிலும், இந்த மகத்தான அசைக்கப்படும் வேளையில், பிசாசு, சத்தியத்தைக் காண்பதிலிருந்து அவனால் உங்களை தடுத்து நிறுத்த முடியுமானால், அவன் அதனோடுகூட உங்களைக் கப்பலிலிருந்து தள்ளி விட்டு விடுவான். சபையானது மறுபடியும் அசைக்கப்பட்டு இருக்கிறது. மனிதர்களே, சகோதரர்களே, நான் இதை உங்களிடம் கூறட்டும்; நீங்கள் இந்த யுத்தத்தைச் செய்ய மாட்டீர்கள். வேறொரு ஸ்தாபனம் எந்த நன்மையும் செய்யாது. அல்லது தேவனுக்கு விரோதமான உபத்திரவம் ஒருபோதும் எந்த நன்மையும் செய்யாது. நாம் தரித்து நின்று நம்முடைய தேவன் செய்யும் இரட்சிப்பைப் பார்ப்போம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருப்பாரென்றால், அவர் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் காண்பிப்பார். அவர் நேற்று செய்தது போல, அவர் இன்றும் என்றென்றும் செய்வார். 25. பூமியில் எப்பொழுதும் இருந்ததிலேயே மிகப் பெரிய இராஜாவானவர் பாவத்துக்கான ஒரு மாற்று மருந்தாக கல்வாரியை நோக்கி வழிநடத்தப்பட்ட போது, உலகத்தின் பாவங்களை நீக்கிப் போடுவதற்காக அவர் அங்கே மரித்தார். ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமானோம்.’ அவர் கல்லறையில் வைக்கப்பட்டு, மூன்று பகலும் இரவுமாக அங்கேயே கிடத்தப்பட்டிருந்த போது... ஆனால் அவரால் அழிவைக் காண முடியாது என்று வேதாகமம் கூறின காரணத்தினால் அவரால் அழிவைக் காண முடியவில்லை. நரகத்திலுள்ள ஒவ்வொரு பிசாசும் எப்பொழுதாவது சொல்லியிருந்த எல்லாவற்றையும் திரும்பப் பெறும்படிக்கு தேவன் செய்தார். ஓ, நான் இந்த அற்புதமான இயேசுவை எவ்வளவாக நேசிக்கிறேன். நரகத்திலுள்ள ஒவ்வொரு பிசாசும் கொடியைக் கீழே போடும்படி அவர் செய்தார். ஒவ்வொரு அவிசுவாசியும் குற்றம் கண்டுபிடிக்கிறவனும் அவமானம் அடையும்படி அவர் செய்தார். அவர் தமது பலம் பொருந்திய வல்லமையைக் காண்பித்த போது, மரணமானது எருசலேமின் மேலாக தரித்து நின்றது, இயேசு மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இன்றிரவு ஜீவிக்கிறார். 26. சற்றே ஒரு சில நாட்களுக்கு முன்பு, நான் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தது போல, அதோ அங்கிருக்கிற கென்டக்கியின் ஒரு சிறிய பழைய ஏரியில், மரித்துப்போன ஒரு சிறிய மீனைப் போன்றதொன்று அரை மணி நேரமாக தண்ணீரின் மேல் கிடந்தது, அப்போது தேவன் அந்த மரணத்தைத் தரித்து நிற்கும்படி செய்வதை நான் கண்டேன், ஒரு சாதாரணமான சிறிய மீன்... நீங்கள் ஒரு மீனைக் காட்டிலும் மேலானவர்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை என்றால்; ஒரு மனிதன் ஒரு மீனைக் காட்டிலும் எவ்வளவு மேலானவனாக இருக்கிறான்-? ஆனால் தேவன் தாம் சாதாரணமான காரியங்களை எடுக்கிறார் என்பதைக் காண்பிக்க விரும்பி, அவர் இன்னும் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருந்தார் என்பதைக் காண்பித்தார். அந்த மீனின் மேலிருந்த மரணத்தைத் தரித்து நிற்கும்படி அவர் செய்ய, அது தன்னுடைய ஜீவனைப் பெற்று மறுபடியுமாக நீந்தி சென்று விட்டது. 27. 69-வருடங்களாக துன்பப்பட்டு, அது தான் என்று நம்புகிறேன், அங்கே கலிபோர்னியாவிலே ஒரு சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உப்சா அவர்கள் தம்முடைய நாட்கள் எல்லாம் ஒரு சக்கர நாற்காலியிலேயே இருக்க வேண்டுமென்று கட்டப்பட்டிருந்தார். அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்து, அவரால் போக முடிந்த ஒவ்வொரு மருத்துவரிடமும், எலும்புக்கான ஒவ்வொரு மிகச்சிறந்த சிறப்பு மருத்துவர்கள் இடமும், மற்ற எல்லாரிடமும் சென்றார். அவரால் கூடுமான எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்த்தார், அவருடைய ஜீவியம் முழுவதுமாக அல்லல்பட்டு வந்தார். ஆனால் தேவனோ அந்த விஞ்ஞானியைத் தரித்து நிற்கப் பண்ணி, காங்கிரஸ்காரர் உப்சா தம்முடைய சக்கர நாற்காலியிலிருந்து எழும்பி மேடைக்கு வந்து, தேவனைத் துதித்துக் கொண்டிருப்பதைக் காணும்படி செய்தார். நிச்சயமாக. 28. அது இரண்டு வருடங்களுக்கு முன்பல்ல, இந்த வருட அக்டோபர் மாத, ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ பத்திரிகையில், தேவன், மேயோ மருத்துவமனையை தரித்து நிற்கப் பண்ணி, அந்தக் குணப்படுத்த முடியாத வியாதியின் பேரில் சிறு டோனி மார்டனுடைய சாட்சியைக் கேட்கும்படி செய்து, அவன் மேடைக்குக் கொண்டு வரப்பட்டு, என்ன செய்ய வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் சரியாக அவனிடம் கூறின போது, தேவன் அங்கேயே அந்தச் சிறுவனை சுகமாக்கினார். ஜான் ஹாப்கின்ஸ் மற்றும் மேயோஸ் ஆகிய அந்த விஞ்ஞான உலகத்தினர், நான் அங்கே போன போது, அங்கே அவர்களுடைய மேடையில், அல்லது அங்கேயிருந்த அவர்களுடைய மேஜையில், வாசிக்கும்படியாக, ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ பத்திரிகை இருந்தது. தேவன் அந்த மருத்துவ உலகத்தைத் தரித்து நிற்கும்படி செய்து, தேவனுடைய வல்லமையினாலே டோனி மார்டன் சுகமடைவதைக் காணும்படி செய்தார். 29.அவருடைய ஊழியக்காரனாகிய நான் இன்றிரவு சரியாக அவரை வெளிப்படுத்திக் காண்பிக்கிறேன். நீங்கள் எப்பொழுதாவது செய்த ஒவ்வொரு பாவத்தையும் தேவன் ...படி செய்வார். தனக்கு சொந்தமாக வைத்துக்கொள்வதற்காக உங்கள் ஆத்துமாவை அழைத்த பிசாசு. இன்றிரவு அவர் பிசாசை தரித்து நிற்கும்படி செய்வார். தேவனுடைய வல்லமை இறங்கி வந்து, உங்களுடைய பாவத்தையும் அக்கிரமத்தையும் நீக்கிப் போட்டு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை உங்களுக்குக் கொடுப்பதைக் கவனியுங்கள். அவர் நிச்சயமாகவே அதைச் செய்வார். அவர் ஒவ்வொரு புற்று நோயையும் விழும்படி செய்வார். குருடான ஒவ்வொரு கண்ணையும் திறக்கும்படி அவர் செய்வார். முடமானவர்களை நடக்கும்படி அவர் செய்வார். உங்களை வேதனைப்படுத்தின பிசாசை அவர் தரித்து நிற்கப் பண்ணி, தேவனுடைய மகிமையைக் காணும்படி அவர் செய்வார். இது உங்களுடைய யுத்தம் அல்ல. அப்படியே தரித்து நில்லுங்கள்; இது தேவனுடைய யுத்தம். நீங்கள் பதைபதைப்போடு இருக்க வேண்டாம். மனஅமைதி அற்றவர்களாகவும் நீங்கள் இருக்க வேண்டாம்; தரித்து நில்லுங்கள். நாம் ஒரு பயங்கரமான நேரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஒரு மகத்தான நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொள்ளும்படியாக சபையானது தரித்து நிற்க வேண்டும். ‘தரித்து நின்று தேவனுடைய மகிமையைப் பாருங்கள்.’ அவர் ‘இருந்தேன்’ என்பதாக இல்லை. அவர் ‘இருக்கிறேன்’ என்பதாகவே இருக்கிறார். அவர் மாறாதவராய் இருக்கிறார். அவர்கள் தரித்து நின்றது போல, நாமும் அப்படியே தரித்து நிற்போம், நான் மாறாதவராக ‘இருக்கிறேன்,’ நான் இன்றிரவும் ஜீவிக்கிறவராக ‘இருக்கிறேன்.’ நாம் இந்தக் காரியங்களை சிந்தித்துக் கொண்டு இருக்கையில், நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 30. ஆசீர்வதிக்கப்பட்ட பரலோகப் பிதாவே, இன்றிரவு நீர் எங்களுக்குக் கொடுத்திருக்கிற இந்த ஜனங்களின் அனுகூலத்திற்காக நாங்கள் உம்முடைய சிங்காசனத்தை தாழ்மையோடு அணுகுகையில், கர்த்தாவே, ஒரு சபையிலிருந்து வேறொரு சபைக்கு ஓடிக் கொண்டும், ஒரு கேளிக்கை ஸ்தலத்திலிருந்து மற்ற கேளிக்கை இடங்களை நோக்கி ஓடிக் கொண்டும் இருக்கிற சிலர் ஒருக்கால் இங்கே இருக்கலாம். இரவு நேர கேளிக்கை விடுதிகளில் நடனம் ஆடுகிறவர்களும் இங்கே ஒருக்கால் இருக்கலாம்; விஸ்கி குடிகாரர்களும் இங்கேயிருக்கலாம்; புகையிலை பயன்படுத்துபவர்களும் இருக்கலாம்; சமாதானத்தைக் கண்டடைய முயற்சித்து, அதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருக்கிற இன்பத்தைத் தேடிக் கொண்டு இருக்கிறவர்களும் இன்றிரவு இங்கே இருக்கலாம். ஓ தேவனே, ‘பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிறையப்படுவார்கள்’ என்பது உம்முடைய வாக்குத்தத்தமாக உள்ளது. இன்றிரவு அந்தத் தாகமானது அவர்களுடைய உட்புற ஜீவனுக்குள்ளும், அந்த ஜனங்களுடைய இருதயத்திற்குள்ளும் மிகவும் உண்மையாக ஆகி, அவர்கள் சரியாக இப்பொழுதே தரித்து நின்று கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வார்களாக. அவர்களுடைய ஜீவியங்களில் அவர்களுக்கு தொல்லை இருக்குமானால், இச்சை மற்றும் உலகப்பிரகாரமான ஜீவியத்தின் மூலமாக சோதனையானது அவர்களை வீழ்ந்து போகும்படி செய்திருக்குமானால், அவர்கள் இங்கிருந்து நடந்து போகையில், நீர் ஒவ்வொரு பிசாசையும் தரித்து நிற்கும்படி செய்யும். நீர் இவர்களை, இந்தப் பழைய கூட்டத்தினரை தரித்து நிற்கும்படி செய்து, ஒரு பரிசுத்த வானாக மதுக்கடை பக்கமாக எந்தத் தொல்லையுமே இல்லாமல் நடந்து போவதைப் பார்க்கும்படி செய்வீர். இதை அருளும், கர்த்தாவே. நாங்கள் உம் பேரில் காத்துக் கொண்டு இருக்கையில், ஜனங்களுடைய இருதயங்களில் பேசும். மேலும் இப்பொழுது, இந்த சில வார்த்தைகள் ஜனங்களுடைய இருதயங்களுக்குள் விழுந்து கொண்டிருக்கையில், நீர் என்ன செய்திருக்கிறீர் என்பதைக் காணும்படியாக நாங்கள் தரித்து நின்று கொண்டிருக்கிறோம். 31. அதில் அவ்வாறு இருக்குமானால், நாங்கள் தரித்து நின்று காத்துக் கொண்டிருக்கையில், நீங்கள் அப்படியே தேவனை நோக்கி உங்கள் கரங்களை உயர்த்தி, ‘தேவனே, நான் சரியாக இப்பொழுதே விட்டுக் கொடுக்கையில், நீர் என்னைக் கழுவி, மறுபடியுமாக என்னை உருவாக்கும். நான் முழுவதும் தொல்லையில் இருக்கிறேன்; நான் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு ஓடியிருக்கிறேன், ஆனால் இன்றிரவு முதற்கொண்டு நான் தரித்து நிற்கப் போகிறேன். நான் இப்பொழுது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறுவீர்களா-? நீங்கள் உங்கள் தலைகளைத் தாழ்த்தியிருக்கையில், சபையானது ஜெபித்துக் கொண்டிருக்க, நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தி, ‘நான்... செய்கையில், சகோதரனே, எனக்காக ஜெபியுங்கள்’ என்று கூறுங்கள். சிறு சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. என்னுடைய சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அற்புதம், ஓ, எவ்வளவு அற்புதமாயுள்ளது. சரியாக ஒரு மனிதன் தன்னுடைய கரங்களை உயர்த்துகையில், தேவன் அவனுக்காக ஏதோ ஓன்றைச் செய்வதை நான் கண்டேன். ஓ, இயேசு இன்னும் ஜீவிக்கிறார். அவர் இன்றிரவு சரியாக இங்கேயிருக்கிறார். சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கே மேலே இருக்கும் சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இங்கேயிருக்கும் சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது ஒருவர், அப்படியே உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? தொல்லையில் அகப்பட்டிருந்த ஒரு மனிதர் சரியாக இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் கண்டேன்; அவர் இன்னும் அதை அறிந்து கொள்ளவில்லை, ஆனால் அவர் சரியாக இப்பொழுதே சுகமடைந்து விட்டார். அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார், தேவன் அவரைச் சுகமாக்கினார். அது சற்று முன்பு செய்யப்பட்டதை நான் கண்டேன். சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ‘நான் தரித்து நின்று கொண்டிருக்கிறேன், கர்த்தாவே’ என்று நாம் ஜெபித்துக் கொண்டிருக்கையில், வேறு யாராவது-? சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரியே. ‘நான் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறேன். ஓ, நான்...’ 32. இப்பொழுது, வியாதியோடும் தேவையோடும் இருக்கிற நீங்கள், ‘கர்த்தாவே, நான் தரித்து நின்று கொண்டிருக்கிறேன். நான் உம்முடைய இரட்சிப்பைக் காண விரும்புகிறேன். இது என்னுடைய யுத்தம் அல்லவென்று நீர் சொல்லியிருக்கிறீர்; நான் முழுவதும் குழம்பிக் கொண்டும் பரபரப்போடு மனஅமைதி இல்லாமலும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நான் அசெம்பிளிஸ் சபையைச் சேர்ந்து கொள்ள வேண்டுமா-? நான் சர்ச் ஆஃப் காட் சபையைச் சேர்ந்து கொள்ள வேண்டுமா-? நான் மெதோடிஸ்டாக இருக்க வேண்டுமா-? ஒரு பாப்டிஸ்டாக நான் இருக்க வேண்டுமா-? நான் பிலதெல்பியன் சபைக்குப் போக வேண்டுமா-?’ என்று கூறலாம். அதுவல்ல அது. தரித்து நின்று தேவன் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். பாதை நெடுகிலும் பிரச்சனையைக் கொண்டவர்களாய், ‘சகோ.பிரன்ஹாமே, தேவனுடைய கிருபையின் மூலமாக, தேவ கிருபையைக் காணும்படி நான் இன்றிரவு தரித்து நிற்கிறேன்’ என்று கூறுகிற வேறொரு பாவியான நபர் இருக்கிறீர்களா-? சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. மற்றவர்கள் யாராவது உண்டா, ஒரு டஜன் அல்லது இரண்டு டஜன் ஜனங்கள் தங்கள் கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள். சரியாக இங்கே முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது மிகவும் நல்லது. நாம் ஜெபிப்பதற்கு முன்பு, அங்கே வேறொருவர் உண்டா-? சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக: அது நல்லது. 33. எங்கள் பரலோகப் பிதாவே, வார்த்தையைப் பெற்றுக் கொண்டிருக்கிற இவர்களை நாங்கள் இன்றிரவு தாழ்மையோடு உம்மிடம் கொண்டு வருகிறோம். ஜெயத்தோடு ஜீவித்துக் கெண்டிருக்கிற அநேகர் இங்கே இருக்கிறார்கள், சந்தோஷத்தோடு இருக்கிறவர்கள் இருக்கும் இடமாகிய மலையின் உச்சியில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தேவையோடு நின்று கொண்டு இருக்கிறவர்கள் இங்கே இருக்கிறார்கள்; அவர்கள் குழப்பத்தோடு இடத்திற்கிடம் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். தேவனே, சரியாக இந்நேரத்தில் மகத்தான பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயங்களுக்குள் சென்று, அவர்கள் தாங்களாகவே செய்ய முடியாதவைகளைச் செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அவர்களுடைய அறிவு சார்ந்த திறன்கள், அவர்கள் எண்ணி ஏங்கிக் கொண்டு இருக்கும் அந்த திருப்தியை அவர்களுக்குக் கொடுக்கும் அந்த இடத்திற்கு எப்பொழுதாவது செல்லவே முடியாது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் தாமே சரியாக இப்பொழுதே அவர்களுடைய ஆத்துமாக்களுக்குள் வந்து தேவனுடைய திருப்தி அளிக்கும் பங்கை அவர்களுக்குக் கொடுப்பாராக. இந்த ஆசீர்வாதத்தை இவர்களுக்குக் (கொடுக்கும் படியாக), கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். ஓ, என்னவொரு பாக்கியமான காரியம். நீங்கள் நலமாக உணருகிறீர்களா-? அப்படியே... நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? இப்பொழுது ஒரு முறை அந்தப் பாடலைப் பாடுவோம். நான் இருக்கும் நிலையிலே, எந்த சாக்குப்போக்குமின்றி வருகிறேன், ஆனால் உமது இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது, உமது வாக்குத்தத்தத்தை நான் விசுவாசிப்பதால், ஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்-! நான் வருகிறேன்-! 34. ஓ, உங்களை உட்புறத்தில் தேய்த்து கழுவி சுத்தம் செய்கிற ஆசீர்வதிக்கப்பட்ட பழைய சுவிசேஷத்தைக் குறித்து ஏதோவொன்றுண்டு. அது என்னையும் சுத்தம் செய்கிறது; ஒரு வித்தியாசமான நபரைப் போன்று அது என்னை உணரச் செய்கிறது. இப்பொழுது, என்னுடைய அன்புக்குரிய நண்பர்களே, கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று நான் உரிமைகோருகிறேன். நீங்கள் இங்கும் அங்குமாக வெவ்வேறு திசைகளில் குதித்து ஓடிக் கொள்ளவும், இதை நோக்கியும் அதை நோக்கியும் ஓடிக் கொண்டிருக்கவும் வேண்டியதில்லை என்னும் போது, நாம் ஏன் அதைச் செய்கிறோம். அப்படியே தரித்து நின்று, நம்முடைய தேவன் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழாவிட்டால், நமக்கு எந்த இரட்சிப்பும் கிடையாது. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இல்லை என்றால், நமக்கு எந்த இரட்சிப்பும் கிடையாது. ஆனால் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருப்பாரானால், நமக்கு இரட்சிப்பு உண்டு. அது அவருடைய வாக்குத்தத்தத்தின் மூலமாகவே. 35. நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கையில், இதன் பேரில் பயபக்தியோடு (solemnly) காத்துக் கொண்டிருப்போமாக. குழப்பமடைய வேண்டாம். அங்கே கொஞ்சம் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நாம் சிலரை மேடைக்கு அழைக்கப் போகிறோம். ஐயா, அங்கே உங்கள் கரத்தை உயர்த்தி, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நீர், உமக்கிருந்த நரம்பு சம்பந்தமான கோளாறும் (nervous), தோள்பட்டை பிரச்சனையும் இப்பொழுதே உம்மை விட்டுப் போய் விட்டது. நீர் அப்படியே உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசியும். ஆம், ஐயா. அது சரியே. நீர் இப்பொழுது சுகமடைந்து விட்டீர். நீர் சுகமடைந்தவராய் வீட்டிற்குப் போகலாம். நீர் சற்று முன்பு, உமது கரத்தை கிறிஸ்துவை நோக்கி உயர்த்தினீர், அது சரி தானே-? நீர் இனிமேல் அதை உணரமாட்டீர், அப்படித் தானே-? உம்முடைய நரம்புக்கோளாறு (பதட்டம் - nervousness) போய் விட்டது; உம்முடைய தோள்பட்டை பிரச்சனை தீர்ந்து விட்டது. அதினால் தான் நீர் அவதிப்பட்டு வந்தீர். பாரும்-? அதெல்லாம் முடிந்து விட்டது. ஐயா, நீர் சுகமடைந்து விட்டீர். அது என்ன-? நீங்கள் யூகிக்க வேண்டியதில்லை. நீங்கள் லூத்தரன் சபையையோ, பாப்டிஸ்டு சபையையோ, பிரஸ்பிடேரியன் சபையையோ, அல்லது அசெம்பிளிஸ் சபையையோ அல்லது பிலதெல்பியன் சபையையோ சேர்ந்து கொள்ள வேண்டியதில்லை; அப்படியே தரித்து நின்று தேவனுடைய மகிமையைப் பாருங்கள். தரித்திருந்து, அவரைக் கவனியுங்கள். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 36. எந்த ஜெப அட்டைகள்-? ஆ என்றா சொல்லுகிறீர்கள்-? ஆ 1 தொடங்கி 100 வரையா-? 50 முதல் 100 வரை. சரி. ஆ-50, 51, 52, 53, 54, 55 ஒலிநாடாவில் காலியிடம் -ஆசிரியர். இங்கே வரிசையின் இந்த பக்கத்தில் வெளியே வாருங்கள், நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிப்போம். இப்பொழுது, அவர்கள் வந்து கொண்டிருக்கையில்... அங்கே இறங்கிச் செல்லுங்கள், உங்களில் சிலர் அங்கே கீழே உதவி செய்யுங்கள். சகோதரன் சாத்மன்... என்ன சொல்லுகிறீர்கள்-? சகோ.ஓ-பானன் அவர்களே, நீங்கள்...-? சகோ.ஓ-பானன் அவர்களே, நீங்கள் விரும்பினால், சற்று நேரம் இங்கே வருவீர்களா. பில்லி, நீ அவருக்கு உதவி செய்யும்படி அவர் விரும்புகிறார்-? இப்பொழுது, நம்மில் மீதியானவர்கள், நான் நம்புகிறேன், நான் அப்படியே... இப்பொழுது, எத்தனை பேரை நான் அழைத்தேன்-? 55, 56, 57, 58, 59, 60. சரி, அவர்கள் வந்து கொண்டு இருக்கையில்... சரி. 37. இப்பொழுது நான் இதைக் கேட்க விரும்புகிறேன். நாம் தரித்திருப்போம். இது நாம் கவலைப்படுவதற்கல்ல. தீர்க்கதரிசி, ‘பகலுமல்லாத இரவுமல்லாத ஒரு நாள் வரும். ஆனால் சாயங்காலத்தில் வெளிச்சம் தோன்றும்’ என்று கூறினது போன்றுள்ள ஒரு நாள் வருகிறது. நாம் பாக்கியமான சாயங்கால நேரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். கிழக்கத்திய தேசங்களிலிருந்து வந்திருக்கிற ஜனங்கள் இங்கே இருக்கிறார்கள், அவர்கள் இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் வேதாகமத்தைக் கொண்டு இருப்பதற்கு முன்பே, கிழக்கத்திய ஜனங்கள் 2000 வருடங்களாக வேதாகமத்தைக் கொண்டு இருந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். பரிசுத்த ஆவியானவர் முதலில் கிழக்கில் தான் விழுந்தார். அது எப்போதென்றால்...-?... மேலாக. தாங்கள் அதை ஒழித்துக்கட்டி விட்டதாக அவர்கள் எண்ணின போது, அது அப்படியே வெளிப்பட்டுத் தோன்றினது. இப்பொழுதோ, தீர்க்கதரிசி சொன்னது போல, இருண்ட நாளான ஒரு நாள் வந்திருக்கிறது. அவர்களிடம் போதுமான இரட்சிப்பு இருந்தது, அல்லது கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படியாக, அதன் பேரிலான வெளிச்சம் இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுதோ இது சாயங்கால நேரமாக இருக்கிறது; சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. நாகரிகமானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பிரயாணம் செய்திருக்கிறது. நாம் மேற்கு கடற்கரையில் இருக்கிறோம். கர்த்தருக்குச் சித்தமானால், ஒரு இரவில், ஒருக்கால் புதன்கிழமை இரவு, பேசும்படியான என்னுடைய இரவாக இருக்கும், அப்போது நான், கன்வென்சன் கூட்டத்தில், ‘கிழக்கும் மேற்கும் சந்திக்கும் போது,’ என்ற தீர்க்கதரிசன செய்தியின் பேரில் பேச விரும்புகிறேன். ஆனால் கிழக்கும் மேற்கும் ஒன்றாக சேரும் போது, நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம், துவக்கத்தில் ஜீவித்த அதே பரிசுத்த ஆவியானவரும், அதே கிறிஸ்துவும் இன்றும் இன்றைக்கும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார். சூரியன் மறைவதற்கு சற்று முன்புள்ளதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்... இதோ அது இருக்கிறது. நீதியின் சூரியன் தமது செட்டைகளில் ஆரோக்கியத்தோடு உதித்த போது, ஸ்தாபனங்களுடைய நிழல் மேகங்களை தேவன் தரித்து நிற்கும்படி செய்திருக்கிறார். சந்தேக நிழல்களின் மேகங்களும், சந்தேகப் படுகிற நாஸ்திகர்களும், அவிசுவாசிகளும், அவர்களுடைய வாய்களும் அடைபட்டுப் போயிற்று. அவர்கள் தேவனுடைய மகிமையைக் காணும்படியாக, தேவன் அவர்களைத் தரித்து நிற்கும்படி செய்தார். இன்றிரவு அப்படியே உங்களைத் தானே ஒப்புவித்து விடுங்கள், அப்பொழுது நீங்கள் அவருடைய மகிமையைக் காண்பீர்கள். 38. கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார் என்றால்... அப்போது கிறிஸ்து ஒரு சுகமளிப்பவர் என்று உரிமைகோரவில்லை. பிதா அவருக்குக் காண்பிக்கும் மட்டுமாக அவர் எதையும் செய்யவில்லை என்றே அவர் உரிமைகோரினார். எல்லாருக்கும் அது தெரியும். அவர், ‘நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிறவைகளை நீங்களும் செய்வீர்கள்; இவைகளைப் பார்க்கிலும் அதிகமானவற்றையும் கூட செய்வீர்கள். இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது’ என்றார். அப்படியானால் நீங்கள் இன்றிரவு உங்கள் இருதயத்தில் அமைதியாக இருப்பீர்களானால், அப்படியே... உங்களுடைய வெளிப்புறத்தை நான் அர்த்தப்படுத்தவில்லை, நான் உங்கள் உடைய இருதயத்தைத் தான் குறிப்பிடுகிறேன்; அதை அமைதிப்படுத்திவிட்டு, ‘ஓ கிறிஸ்துவே, நான் உம்மை நேசிக்கிறேன். நான் இதைக் குறித்தும் அதைக் குறித்தும் என்னை அமைதியாக வைத்திருக்கிறேன். நான் இதை எடுத்துக்கொள்ள வேண்டுமானாலும் அல்லது அதை எடுத்துக் கொள்ள வேண்டுமானாலும், நான் உம்மை உமது வாக்குத்தத்தத்தில் எடுத்துக்கொள்கிறேன். கிறிஸ்துவே, இன்றிரவு தயவுசெய்து, கடந்து போன நாட்களில் நீர் செய்தது போன்று, உமது தெய்வீக வல்லமையானது காண்பிக்கப்படுவதை நான் பார்க்கட்டும். அப்போது என்னுடைய ஆத்துமா தரித்து நிற்கும். என்னுடைய ஆவி தரித்து நிற்கும். என்னுடைய புத்திசாலித் தனங்கள் தரித்து நின்று விடும். என்னுடைய படிப்புகள் தரித்து நிற்கும். நான் உமது வார்த்தையைக் கண்டு அதை ஏற்றுக்கொள்வேன்’ என்று கூறுங்கள். அப்போது சாத்தான் தரித்து நிற்பான். உங்களுடைய வியாதியும் தரித்து நின்று, தேவனுடைய மகிமையானது உங்களை வியாதியிலிருந்து மறுபடியும் ஆரோக்கியத்துக்கு கொண்டு வருவதைப் பாருங்கள். ‘தரித்து நின்று தேவனுடைய மகிமையைப் பாருங்கள்.’ 39. சரி, சகோ.சாத்மன் மற்றும்... எங்கே. அடுத்த 15, 20 நிமிடங்களுக்கு அப்படியே தரித்து நின்று கொள்ளுங்கள். என்னவொரு சவால். இதோ நாங்கள் இருக்கிறோம், கிறிஸ்து ஜீவிக்கிறார் என்று நிச்சயமாக தம்மைத் தாமே காண்பிக்கும்படியான காட்சி இதோ இருக்கிறது. நான் உங்களுக்கு வார்த்தையை மாத்திரமே போதித்து, அந்த வார்த்தையானது அதை உரைத்த வரை பகிரங்கமாக வெளிப்படுத்திக் காட்டாவிடில், அந்த வார்த்தையானது எழுதப்பட்ட மற்ற எந்த வார்த்தைகளைக் காட்டிலும் மேலானதல்ல. இந்த வேதாகமம் இன்றிரவு இக்கூடாரத்தில் ஜீவனுள்ளதாய் இராவிடில், அது தேவனுடைய வாக்குத்தத்தமே அல்ல. அப்படியானால் புத்தரும், அவரைப் பின்பற்றுபவர்களும் அதிகமாக சரியாகவே இருந்திருக்கிறார்கள். முகமதியனும் அதிகமாக சரியாகவே இருந்திருக்கிறான், நாம் செய்வது போலவே முகமதியனும், அவனைப் பின்பற்றுபவர்களும் செய்கிறார்கள். சீக்கியர்களும், சமணர்களும் (Jains), அவர்கள் யாராக இருந்தாலும், மந்திரவாதிகளும் ஆசீர்வதிக்கப்பட்டவர்- களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அங்கே ஒரு காரியம் நிச்சயம், கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார். காலேப் ஜனங்களை அமர்த்தினது போல, அவரால் மாத்திரம் அப்படியே ஒரு சில நிமிடங்கள் தம்முடைய சபையைத் தரித்து நிற்கும்படியாக்க கூடுமானால்... இப்பொழுது, அமைதலாயிருந்து, கவனித்து, தேவன் இன்னும் ஜீவிக்கிறாரா என்று பாருங்கள். 40. இங்கே நாம் செங்கடலில் இருக்கிறோம்; நாம் அனுபவம் இல்லாதவர்கள். அவர்கள் அங்கே செங்கடலில் வந்த போது, தேவன் ஏதோவொன்றைச் செய்ய வேண்டியிருந்த ஒரு இடத்தில் அவர்கள் இருந்தனர். கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் பிரசங்கம் பண்ணுகிறேன். தரித்து நின்று தேவனுடைய மகிமையைக் காணுங்கள். துவக்கம் முதலே இது உங்கள் யுத்தம் அல்ல; இது தேவனுடைய யுத்தமாகும். துவக்கம் முதலே இது உங்களுடைய வாக்குத்தத்தமல்ல; இது தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது. இதோ நான் இன்றிரவு நிற்கிறேன்; இந்த ஸ்திரீயைக் குறித்து கண்டு பிடிப்பது என்னுடைய கவலை அல்ல. அதைச் செய்வது தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது. அது சரியே. நான் வெறுமனே தரித்து நிற்கிறேன், தேவனுடைய மகிமை தான் அந்த வேலையை செய்கிறது. நான் என்னுடைய சொந்த வார்த்தைகளில் ஒன்றைக் கூறுவேன் என்றால், அது சரியாக இருக்காது. நான் என்னுடைய வார்த்தைகளைக் கூறமாட்டேன்; நான் வெறுமனே தரித்து நிற்கிறேன், தேவனே அதைச் செய்யட்டும். உணர்ச்சிவசப்பட்டு மன அமைதியில்லாமல், ‘நல்லது, ஒரு ஜெப அட்டை எனக்கு இருந்திருக்குமென்றால்...’ என்று கூற வேண்டாம். தரித்து நில்லுங்கள். 41. இப்பொழுது, இந்த சீமாட்டி இங்கே நிற்கிறாள்; இவள் அமைதியாக நின்று கொண்டு இருக்கிறாள். நானும் அமைதியாக நின்று கொண்டிருக்கிறேன். எல்லாமே அமைதியாக உள்ளது. நாம் நம்முடைய தேவனுடைய மகிமையைக் காண்போம். விசுவாசியுங்கள்; விசுவாசம் கொண்டிருங்கள்; சந்தேகப்படாதீர்கள். அதற்காக நான் உங்கள் விசுவாசத்திற்கு சவால் விடுகிறேன். இப்பொழுது, கர்த்தராகிய இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருப்பாரென்றால், நான் என்னுடைய ஜீவியத்தில் ஒரு போதும் கண்டிராத ஒரு பெண்மணி இதோ நின்று கொண்டு இருக்கிறாள். நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். ஆனால் அங்கே இவளுக்கு அல்லது ஏதோவொன்றுக்கு ஏதோ தவறு நேர்ந்துள்ளது; (இல்லையென்றால்) இவள் இங்கே நின்று கொண்டிருக்க மாட்டாள். கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருப்பாரானால், அவரிடம் வந்த கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயிடம், அவர் மாறாதவர் என்று உரிமைகோருவாரானால், அவரால் அதே பெரிய வல்லமையை காண்பிக்க முடியும். அவர் கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீக்கு செய்தது போல, இங்கே இருக்கும் இந்த ஸ்திரீக்கும் அதை வெளிப்படுத்தும் படியாக அந்த வல்லமையை அவரால் காண்பிக்கக் கூடுமானால், அவர் அந்த அடையாளத்தைச் செய்து காண்பிக்க முடிந்தது போல, அதே விதமாக இந்த சுகமளித்தலையும் அவரால் காண்பிக்க முடியும். 42. இந்த சீமாட்டி இங்கே அவர்களுக்காக இல்லை. இவர்கள் வேறொரு பெண்மணிக்காக இங்கே இருக்கிறார்கள். அது சரி தான், இல்லையா, சீமாட்டியே-? அவள் மிகவும் இளம் பெண்மணி. அது உங்களுடைய மருமகள். அவள் ஒரு.., ஏதோவொரு விதமான மனநல நிறுவனம் அல்லது மருத்துவமனையில் இருக்கிறாள். அது ஒரு மனநிலை கோளாறு, அல்லது அதிர்ச்சி சிகிச்சைகளாக இருக்கிறது. அது சரியே. மேலும் இப்பொழுது அவளுக்கு கட்டியும் இருக்கிறது. நீங்கள் அவளுக்குப் பதிலாக இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள். அது கர்த்தர் உரைக்கிறதாவது. இப்பொழுது, அது உண்மைதானா, உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் தரித்து நின்று அவருடைய மகிமையைப் பெற்றுக் கொண்டீர்கள். நான் தரித்து நின்று அவருடைய மகிமையைக் கண்டேன். நீங்களும் தரித்து நின்று அவருடைய மகிமையைக் கண்டு விட்டீர்கள். அப்படியானால் அவர் அதே கர்த்தராகிய இயேசுவாக இருக்கிறார். சகோதரியே, நீங்கள் சென்று, நீங்கள் கேட்டுக் கொண்டதைப் பெற்றுக் கொள்ளுங்கள். பரலோகத்தின் தேவன் தாமே நீங்கள் கேட்டுக்கொண்ட காரியங்களை உங்களுக்கு அருளுவாராக. ஆமென். 43. எப்படியிருக்கிறீர்கள்-? நாமும் கூட ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம். நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். பதட்டமடையவோ, கலங்கவோ (உணர்ச்சிவசப்படவோ) வேண்டாம், அப்படியே தரித்து நின்று, கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார் என்று அறியுங்கள். கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து அதை நிரூபித்திருப்பார் என்றால், அவர் செய்திருக்கிற ஒவ்வொரு ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குத்தத்தமும் உங்களுடையதாகி விடுகிறது. நீங்கள் ஒரு விசுவாசியாக இருக்கிறீர்கள், அது சரி. நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்று கிறிஸ்து என்னிடம் கூறுவாரானால், அவர் இங்கே ஜீவனோடிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா-? நாம் ஒருவருக்கு ஓருவர் அந்நியர்களாக இருக்கையில், அதை என்னிடம் சொன்னது கிறிஸ்து தான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் தானா-? நாம் ஒருவருக்கு ஓருவர் அந்நியராக இருப்போமானால், அப்படியே உங்கள் கரத்தை அவ்வண்ணமாக உயர்த்துங்கள். ஆமாம், வெளிப்படையாக, நீங்கள் ஒருவிதத்தில் ஓர் அறுவை சிகிச்சைக்காக மேலே இருக்கிறீர்கள். உட்புறத்தில் உமக்கு கோளாறு இருக்கிறது, அது உட்புற கோளாறு. உட்புறத்திலுள்ள கோளாறுக்காக நீங்கள் பரிசோதனையில் இருந்தீர்கள். மேலும் உமக்கு உச்சகட்டமான பதட்டம் இருக்கிறது. உமக்கு இருதயக்கோளாறு இருக்கிறது, அந்த இருதயமானது பதட்டமான ஒரு இருதயமாக இருக்கிறது (அது சரியே), பதட்டமான இருதயம். நீங்கள் இங்கிருந்து வரவில்லை. நீங்கள் இதற்கு மேற்கிலுள்ள வேறொரு பட்டணத்திலிருந்து வருகிறீர்கள், அது தூரமாக உள்ளது, நெப்ராஸ்கா, டால்டன் என்று அழைக்கப்படும் ஒரு பட்டணம், அதைப் போன்ற ஏதோவொன்று, நெப்ராஸ்கா. அது சரியே. வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்; இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கி விட்டார். இப்பொழுதே போய் விசுவாசியுங்கள், சந்தேகப்படாதீர்கள், அப்பொழுது உங்கள் இருதயம் ஒருக்காலும் உங்களைத் தொல்லைப்படுத்தாது. உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால். 44. சரி, சீமாட்டியே, நான் உங்களைக் கண்டிருப்பது போன்று தெரிகிறது; நான் ஒருக்கால் உங்களைக் கண்டிருக்கலாம். ஆனால் உமக்கு என்ன தவறு நேர்ந்திருக்கிறது என்ற எந்தக் கருத்தும் எனக்கு இல்லை, உங்களுக்கு அது தெரியும். நாம்... அது அவ்வாறு இருக்கிற அளவுக்கு, நான் உங்களை எங்கேயோ கண்டிருக்கிறேன்; என்னால் அதை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் செங்கடலை அமைதிப்படுத்தின அதே தேவன் தான் தம்முடைய வல்லமையைக் காண்பிப்பதைப் பார்க்கும்படியாக உங்களையும் என்னையும் அமைதிப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அங்கே உள்ள அந்த சபையோரைப் பாருங்கள்; அவர்கள் எவ்வளவு அமைதியாயிருக்கிறார்கள் என்று காண்கிறீர்களா-? கிறிஸ்து மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்து விட்டாரா என்று பார்க்கும்படியாகவே நாம் கவனித்துக் கொண்டு இருக்கிறோம். அவர், ‘நான் செய்கிற கிரியைகளை...’ ‘என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் (பரிசுத்த யோவான் 14:7), நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்.’ அது சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கிறது. நீங்கள் உங்களுக்காக இங்கே இருக்கவில்லை. நீங்கள் ஒரு-ஒரு பையனுக்காக இங்கே இருக்கிறீர்கள். அது ஒரு மகன், இல்லை, அது ஒரு பேரன். அது உங்களுடைய பேரன். அந்தப் பேரனுக்கு சுரப்பி கோளாறு இருக்கிறது, அது அவனுடைய கேட்கும் திறனைப் பாதித்து இருக்கிறது. அது உண்மை. நான் ஜெபிக்கும்படியாக உங்களுடைய கரத்தில் நீங்கள் வைத்திருந்த அந்தக் கைக்குட்டையை எடுத்து, அதை அவன் மேல் வையுங்கள், அவன் தன்னுடைய கேட்கும் திறனைப் பெற்றுக் கொள்வான். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் போங்கள், சந்தேகப்படாதீர்கள். ஆமென். 45. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் சர்வவல்லமை உள்ள தேவனுடைய பிரசன்னத்தில் தரித்து நின்று, அவர் காண்பித்த வல்லமையைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறீர்களா-? ...அவர் ஒரு போதும்... உங்களைச் சுகப்படுத்தும்படியாக எனக்கு அவர் வல்லமையைக் கொடுக்க முடியவில்லை, ஏனென்றால் அவர் ஏற்கனவே சுகமளித்தலைச் செய்து விட்டார். அது செய்து முடிக்கப்பட்ட ஒரு கிரியையாக இருக்கிறது. ஆனால் அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து, இங்கே நின்று கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் உணரும்படி செய்வதற்கான ஒரு மேலான நிலைக்கு உங்களை கொண்டுவர அங்கே உங்களுக்குள் ஏதாவது இருக்குமா என்று உங்களை உணரச்செய்யும்படியான வல்லமையை அவரால் எனக்குக் கொடுக்க முடியும். அது சரிதானா-? தன்னுடைய கரத்தைச் சுற்றிலும் ஏதோவொரு விதமான ஒரு-ஒரு கட்டோடு கூட இந்த சீமாட்டியை நான் காண்கிறேன். இல்லை, அது இரத்த அழுத்தத்தை எடுப்பதாக இருக்கிறது. உயர் இரத்த அழுத்தம், இவர்கள் அதனால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அது சரியே. மேலும் அதன் பிறகு உங்களுக்கு ஏதோவொரு வகையான சிறுநீர்ப்பைக் கோளாறு இருக்கிறது. அந்த சிறுநீர்ப்பைக் கோளாறுக்காக, சமீபத்தில் உங்களுக்கு ஒரு அறுவைச் சிகிச்சை உண்டாயிருந்தது. அது சரியே. நீங்கள் சுகமடையும்படியாக சர்வவல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னத்தில் தரித்து நின்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா-? அப்படியானால், கிறிஸ்துவின் நாமத்தில், போய் அதைப் பெற்றுக்கொண்டு, சுகமடையுங்கள். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 46. எப்படியிருக்கிறீர்கள்-? சற்று பொறுங்கள். இந்த சீமாட்டியின் மேல் ஒரு செவிட்டு ஆவி உள்ளது. இவர்கள் கேட்கும் திறனை நாம் பெற்றுக்கொள்ள முடியும் வரையில், அப்படியே ஒரு நிமிடம் உங்கள் தலையைத் தாழ்த்துவீர்களா-? ஓ தேவனே, இவர்களுடைய கேட்கும் திறனை நீர் இவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். இதை அருளும், கர்த்தாவே. இதை இவர்களுக்கு செய்திருக்கிற அந்தப் பிசாசை நான் கண்டனம் செய்கிறேன். ஓ தேவனே, இந்தப் பெண்மணி கேட்கும் திறனைப் பெற்றுக்கொள்ளும்படியாக உம்முடைய வல்லமையைக் காண்பித்தருளும். அப்படியானால், கர்த்தாவே, இவர்களால் கேட்க முடியும் போது, இவர்கள் உம்முடைய மகிமையை அறிந்து கொள்ளும்படியாக இவர்களுக்கு அதை வெளிப்படுத்தி அருளும். இந்தப் பிசாசை நான் கடிந்துகொண்டு, அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவர்களை விட்டு துரத்துகிறேன். நீங்கள் எவ்வளவு காலமாக அவ்விதம் இருந்து வருகிறீர்கள்-? நான் சொல்லுவது இப்பொழுது உங்களுக்கு சரியாகக் கேட்கிறது. நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள். பாருங்கள், இதோ உங்களுடைய சிறிய கருவி இங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது. அது தான் உங்களுடைய மிகச்சிறந்த காதாக இருந்தது, ஆனால் இப்பொழுது உங்களால் இவை இரண்டில் ஒன்றில் இருந்து கேட்க முடியும். பாருங்கள்-? நான் சொல்லுவது கேட்கிறதா-? என்னைக் கேட்கிறதா-? நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள். இப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா-? இப்பொழுது, உங்களால் கேட்க முடிகிறதா என்று நாம் சற்றே ஒரு நிமிடம் பேசலாம். அவன் உங்களைக் கடந்து போகவே மாட்டான். நீங்கள் வேறு சில கோளாறுகளாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அது... நீங்கள்... அது உங்களை வளையாதபடி விறைப்பாக ஆக்குகிறது; அது கீல்வாதம். உங்களுக்கு கீல்வாதம் உள்ளது; நீங்கள் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள். உமக்கு ஒரு விபத்து நேர்ந்து, நீங்கள் உங்கள் மணிக்கட்டை உடைத்துக் கொண்டீர்கள் என்று நான் காண்கிறேன்; அது சரியே. மேலும் இப்பொழுது அது வீங்கிக் கொண்டிருக்கிறது. அது சரியே. கிறிஸ்துவின் நாமத்தில், நான் அதைக் கடிந்து கொண்டு, இவர்களுடைய சுகத்திற்காக வேண்டிக் கொள்கிறேன். ஆமென். இப்பொழுது, உங்களுடைய மணிக்கட்டை இவ்விதமாக முன்னும் பின்னும் அசைத்துப் பாருங்கள்; இவ்விதமாகப் போங்கள். இப்பொழுது, நீங்கள் களிகூர்ந்த படியே, உங்கள் பாதையில் போகலாம், குணமாகி, சுகமடையுங்கள். நாம், ‘சர்வவல்லமையுள்ள ஜீவனுள்ள தேவனுக்கு துதி உண்டாவதாக’ என்று கூறுவோம். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? ‘அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்’ என்று அவர் சொல்லி இருக்கிறார். இது உங்களுடைய யுத்தம் அல்ல; இது தேவனுடைய யுத்தமாகும். 47. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும், ஐயா, உங்கள் மேலுள்ள அந்த முறிவை தேவன் சுகப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? குடலிறக்கமா (Hernia)-? அவர் உங்களை சுகப்படுத்த நீங்கள் விரும்பினீர்கள், நீங்கள் அவ்வாறு விரும்பவில்லையா-? நீர் அதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தீர். அது சரி என்றால், உம்முடைய கரத்தை மேலே உயர்த்தும். சரி, நீர் அதைப் பெற்று விட்டீர் என்று விசுவாசித்தால்... ஆமென். தேவனிடத்தில் விசுவாசமாயிரும். அந்தப் பெண்களுக்குரிய கோளாறிலிருந்து, ஸ்திரீகளுக்குரிய அந்தக் கோளாறிலிருந்து நீங்கள் குணமடைந்து, சுகமடைந்தவராய் போக விரும்புகிறீர்களா-? அப்படியானால், தேவனை விசுவாசித்தபடி சென்று, நீங்கள் அமைதியாய் இருந்து, அவரைத் துதிக்கிறீர்கள் என்று இப்பொழுது அவரை நோக்கி சந்தோஷத்தின் சத்தத்தை எழுப்புங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? அந்தக் கீல்வாதத்திலிருந்து தேவன் உங்களைச் சுகப்படுத்தி, குணப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறீர்களா-? அப்படியானால், களிகூர்ந்தபடியே, ‘தேவனுக்கு துதி உண்டாவதாக’ என்று கூறியபடி, உங்கள் பாதையில் செல்லுங்கள், அப்பொழுது அவர் உங்களைச் சுகப்படுத்துவார். இருதயக்கோளாறைச் சுகப்படுத்துவது தேவனுக்கு லேசான காரியம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? உங்கள் கரங்களை உயர்த்தி, உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொண்டு, பாதையில் சென்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமடையுங்கள். 48. நீங்கள் மறுபடியும் சாப்பிட்டு, அந்த வயிற்றுக் கோளாறு உங்களை விட்டுப் போய், சுகம் அடைய விரும்புகிறீர்களா-? அது உங்களை கீழான நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது, எடையை இழந்து வருகிறீர்கள், மற்றும் எல்லா காரியமும் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் மிகவும் பெரியவராக, மிகவும் அதிக எடையுள்ளவராக தோற்றமளிக்கும் நிலையில் நான் உங்களைக் கண்டேன். உங்களுடைய வயிற்றிலிருந்து எல்லா நேரமும் தொடர்ந்து ஏப்பம் வருவதைப் போன்றும், மற்றும் எல்லாமும் இருந்து வருகிறது. சுளுக்குப் பிடிப்புகள் உள்ளன, உங்களால் இரவில் தூங்க முடியவில்லை. அது... அது சரியல்லவா-? அது சரியே. இப்பொழுது, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அப்படியானால் போய் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமடையுங்கள். வெறுமனே விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நல்லது, நீங்கள், நீங்கள் படுக்கும் போது, உங்களுடைய கோளாறு மிக மோசமாக இருக்கும் போது; அது உங்களுடைய இருதயம் என்று உங்களுக்குத் தெரியும், அது அப்படியே தொடர்ந்து படபடப்பாகிக் கொண்டு, அவ்விதமாக அதை ஆக்கிக் கொண்டிருக்கிறது, அது அப்படியே ஒரு பதட்டமுள்ள இருதயமாக இருக்கிறது. தேவன் உங்களைச் சுகப்படுத்தி விட்டார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அப்படியானால் போய், தேவனுடைய மகிமையைப் பெற்றுக் கொண்டு. சுகமடையுங்கள். தேவன் அந்த கீல்வாதத்தை உங்களை விட்டு எடுத்துப் போடுவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அப்படியானால் உங்கள் கால்களை மிதித்தபடியே தேவனைத் துதித்துக் கொண்டு மேடையை விட்டுச் செல்லுங்கள். இப்பொழுது பயப்படாதீர்கள். செய்யும்படி உங்களிடம் சொல்லப்பட்டபடியே செய்யுங்கள். நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்களா-? ‘அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். ஓ, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். முழுவதும் சுக்குநூறாக கிழிக்கப்பட்டுவிட வேண்டாம்; அவர் இங்கே இருக்கிறார். 49. உன்னுடைய மார்பகத்தில் ஏதோ கோளாறு (wrong) உள்ளது, இல்லையா, சீமாட்டியே-? ஒரு இளஞ்சிவப்பான காரியத்தைத் தன் மேல் அணிந்து கொண்டு அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கும் சிறு சீமாட்டியே, நான் தரிசனத்தைக் காண்கிறேன். ஆமாம், அது சரியே. உன்னுடைய மார்பகத்தில் ஏதோ கோளாறு உள்ளது. எனக்கு உன்னைத் தெரியாது, உனக்கும் என்னைத் தெரியாது; ஆனால் நீ அங்குள்ள ஏதோ ஓன்றைத் தொட்டாய், இல்லையா-? நீ ஏதோவொன்றைத் தொட்டாய் என்று உனக்குத் தெரியும். நம்முடைய அறிக்கையின் பேரில் பிரதான ஆசாரியராயிருக்கிற கிறிஸ்துவைத் தான் நீ தொட்டாய். உனக்கு அடுத்ததாக உட்கார்ந்து கொண்டிருக்கும் சீமாட்டிக்கு வயிற்றுக் கோளாறு இருக்கிறது, இல்லையா, சீமாட்டியே-? கிறிஸ்து உன்னை சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கிறாயா-? நான் உன்னிடம் ஒன்றைக் கேட்கட்டும், பெண்களாகிய நீங்கள்-நீங்கள், அங்கே ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கும் இரண்டு பெண்களே. நீங்கள் சினேகிதிகளாக, அல்லது ஏதோவொன்றாக இருப்பது போல் தெரிகிறது, அல்லது நீங்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கிறீர்கள். அது சரியே, நீங்கள் நன்கு பழகி அறிமுகம் ஆனவர்கள். நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்றும், தேவன் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், அவர் தேவன் என்றும், அவர் உங்களை நேசிக்கிறார் என்றும், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார் என்றும் அறிவிக்கும் படியாக என்னை இங்கே அனுப்பியிருக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சீமாட்டியே, உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்; இந்தக் கூட்டத்தில் இருக்கிற ஒரு மகன் உங்களுக்கு உண்டு. அவனுக்கு முதுகுக் கோளாறு இருக்கிறது, அவன் சுகமடைய விரும்புகிறான். அது சரிதான், இல்லையா-? அங்கேயிருக்கும் சீமாட்டியே, இங்கே இந்தக் கூட்டத்தில் உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு பெருங்குடல் கோளாறு இருக்கிறது, அவளும் சுகமடைய விரும்புகிறாள். அது சரியென்றால், நீங்கள் இருவரும் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி, நீங்கள் இருவரும் சுகமடைந்து விட்டீர்கள். இப்பொழுது, ஒரே வரிசையில் இருக்கும் நீங்கள் நான்கு பேர், அதோ நீங்கள் எல்லாரும் இருக்கிறீர்கள். நீங்கள் போய் சுகமடையலாம். 50 .தேவன் இன்னும் தேவனாக இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அப்படி ஆனால் அவர் சொன்னார்... இது உங்கள் யுத்தமல்ல; இது அவருடைய யுத்தம். யுத்தம் பண்ணுகிற ஒருவர் அவர் தான். சத்துரு வந்து கொண்டிருக்க, அவரோ, ‘ஆனால் நீங்கள் தரித்து நில்லுங்கள்’ என்றார். கலங்க வேண்டாம்; இங்கிருக்கும் எல்லோருக்கும் ஒரு விசுவாச ஜெபத்தை நாம் ஏறெடுக்கப் போகிறோம். நீங்கள் எல்லாரும் சுகமடைந்து விடுவீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? அப்படியானால் அமைதியாக உங்கள் கரங்களை ஒருவர்மேல் ஒருவர் வையுங்கள். ஓ, எனது சகோதரனே, நீ பயப்படாதே; கலங்காதே. இன்னும் தேவனால் என்னதான் செய்ய முடியும்-? இப்பொழுதே அமர்ந்திருந்து அவர் தேவன் என்று அறிந்து கொள். இது உன்னுடைய யுத்தமல்ல. அவர்கள் ஜெபம் பண்ணியிருந்தனர், அவன் அந்தச் சேனையிடம், ‘அங்கு போய், அப்படியே தரித்து நின்று, என்னுடைய மகிமையைப் பாருங்கள்’ என்றான். ஏன், அவர்கள் இரண்டு நாட்களாக கொள்ளையிட்டார்கள். அவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யும் அளவுக்கு, அவர் சத்துருவை அப்படிப்பட்ட ஒரு குழப்பத்துக்கு உள்ளாக்கினார், அப்படிப்பட்ட ஒரு கலகத்துக்கு ஆளாக்கினார். நிச்சயமாக. இப்பொழுது நீங்கள் அப்படியே தரித்திருந்து, தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணி இருக்கிறார் என்றும், அவர் தம்முடைய வேதாகமத்தின் மூலமாக அதைக் கொடுத்திருக்கிறார் என்றும் தம்முடைய உயிர்த்தெழுதல் மூலமாக அவர் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார் என்றும் அறிந்து கொள்வீர்களானால். அவர் அதைத் தம்முடைய சபை மூலமாக காண்பித்தார், அவர் இன்றிரவு இங்கே அதைக் காண்பித்திருக்கிறார். அவரால் காண்பிக்க முடிந்த ஒன்றை நான் பெற்றுக்கொள்ளும் மட்டுமாக நான் தொடர்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறேன், அவரால் செவிடரைச் சுகப்படுத்த முடியும் என்பதைக் காண்பிக்கும்படி, இது ஒரு செவிடான பெண்மணி. அது குருடராகவோ, செவிடராகவோ, ஊமையராகவோ, அது எதுவாக இருந்தாலும், அவர் எதையும் செய்வார். இது நம்முடைய யுத்தமல்ல; இது அவருடைய யுத்தமாகும். அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். இப்பொழுது நாம் அவரை விசுவாசிப்போம். நாம் ஜெபிப்போமாக. 51. அன்புள்ள இயேசுவே, இன்றிரவு இந்தச் சிறு செய்தியின் கனிகளின் மூலமாக, எப்படியும் உமது ஆச்சரியமான கிருபையின் மூலமாகவே, எங்களுக்கு உமது பார்வையில் தயவு கிடைத்தது, நீர் உமது மகத்தான வல்லமையுள்ள புயத்தை காண்பித்திருக்கிறீர். காலங்கள் முழுவதும் மனிதர்கள் காணும்படி ஏங்கின அடையாளங்களை நீர் இங்கே முன்னால் காண்பித்திருக்கிறீர். ஜான் வெஸ்லி காண ஏங்கின அடையாளங்களை இங்கே காண்பித்தீர். கால்வின் காணும்படி ஏங்கின அடையாளங்களை நீர் காண்பித்தீர். சாங்கி, மூடி, பின்னி, நாக்ஸ், அவர்கள் எல்லாருமே அதைக் காண ஏங்கினார்கள். ஆனால் சாயங்கால வெளிச்சம் வந்திருக்கிறது; ஸ்தாபன தடைகள் தரித்து நிற்க, சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதிகாலையின் துவக்கத்தில் அவர் கிழக்கத்திய தேசங்களில் இருந்த அதே விதமாகவே அவர் இருக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படி இந்த மேற்கத்திய அடிவானத்தின் மேல் தம்முடைய செட்டைகளை விரித்திருக்கிற மகத்தான தேவ குமாரனின் பிரகாசமாக ஒளிக்கதிர் வீசுகிற சுகமளிக்கிற வல்லமையில் நாங்கள் ஜீவித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இன்றிரவு இந்தச் சபையார் தரித்து நின்று கொண்டிருக்கிறார்கள். விசுவாச ஜெபத்தை எவ்வாறு ஏறெடுப்பது என்று எனக்குத் தெரிந்த மிகச்சிறந்த முறையில் நான் உம்மிடம் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். இங்கிருக்கும் அநேகர் உம்மை தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உம்மைத் தங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுதும், தேவனே, இந்த பாக்கியமான நேரத்தில் இவர்கள் காத்துக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் தாமே பரலோகத்திலிருந்து வந்து, இங்கே உள்ள ஒவ்வொரு இருதயத்தையும் நிரப்புவாராக, வெறுமனே கடந்து போன காலங்களைப் போல் இல்லாமல், அது வித்தியாசமாக இருப்பதாக. இவர்கள் எழும்பி பிசாசு தோற்கடிக்கப்படுவதைக் காண்பார்களாக, ஒவ்வொரு இருண்ட மேகமும் விலகி ஓடுவதாக, துன்பப்படுகிறவர்கள் நடப்பதையும், குருடர் காண்பதையும், செவிடர்கள் கேட்பதையும் பார்க்கும்படியாக, அதோ அங்கே வெளியே நின்றுகொண்டு, தரித்து நிற்கிறார்கள். சாத்தானே, தரித்து நின்று, ஜீவனுள்ள தேவனுடைய வல்லமையைப் பார். இந்த ஜனங்களை விட்டு தூரவிலகி நிற்கும்படி உனக்குக் கட்டளையிடுகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவன் தாமே தமது வல்லமையைக் காண்பிப்பாராக. 52. முடவர்களோ, அல்லது நீங்கள் யாராக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் நான் சவால் விடுகிறேன், முடமான கையை உடையவர்களும், செவிடர்களும், ஊமையர்களும், அல்லது குருடர்களுமாகிய ஒவ்வொரு நபரும் இந்நேரத்தில் உங்கள் காலூன்றி எழுந்து நிற்க வேண்டுமென்று நான் சவால் விடுக்கிறேன். நீங்கள் புற்று நோயை உடையவர்களோ, கீல் வாதத்தை உடையவர்களோ, அது என்னவாக இருந்தாலும், சாத்தான் தரித்து நின்று, நீங்கள் அந்த நாற்காலியிலிருந்து எழுந்து, தேவனுக்கு துதி செலுத்துவதை அவன் கவனித்தாக வேண்டி இருக்கும். இப்பொழுது உங்கள் காலூன்றி எழுந்து நின்று, தேவனுக்கு துதியைச் செலுத்துங்கள். பிசாசு எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருப்பதைக் கவனியுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எழுந்து, தேவனுடைய மகிமையைப் பாருங்கள். அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள், முழு சபையாரும் தங்கள் கால்களில். அவர் மகத்தான யேகோவாவாகவும், ஜீவனுள்ள தேவனாகவும் இருக்கையில், இப்பொழுது நாம் அவருக்கு துதியைச் செலுத்துவோம். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. சற்று நேரத்துக்கு முன்பு, எழும்ப முடியாமல், இருந்த ஒரு சிறு பெண்மணி, அவளுடைய சிநேகிதி தன்னுடைய கரத்தை அவள் மேல் வைக்க, அவள் மேலே துள்ளிக் குதித்துக்கொண்டு, சரியாக இங்கே நின்று கொண்டு இருக்கிறாள். ‘தரித்து நின்று, தேவனுடைய வல்லமையைப் பாருங்கள்.’ 53. நான் அவரைத் துதிப்பேன்; நான் அவரைத் துதிப்பேன்; பாவிகளுக்காக கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைத் துதிப்பேன்; சகல ஜனங்களே, நீங்கள் அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவ முடியும். நம்முடைய சத்தங்களையும், நம்முடைய கரங்களையும், நம்முடைய இருதயங்களையும், நம்முடைய விசுவாசத்தையும், நம்முடைய உணர்ச்சிகளையும் தேவனிடம் உயர்த்தி, நம்முடைய உச்ச குரலில் நாம் அதைப் பாடுவோம், ‘நான் அவரைத் துதிப்பேன்.’ சரி இப்பொழுது. நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன், பாவிகளுக்காக கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைத் துதிப்பேன்; சகல ஜனங்களே, நீங்கள் அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவி யிருக்கிறது. மீண்டும் ஒருமுறை, தொடங்குவோம், இப்பொழுது, எல்லாரும். நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன், பாவிகளுக்காக கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைத் துதிப்பேன்; சகல ஜனங்களே, நீங்கள் அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவியிருக்கிறது. 54. நான் இவ்விதமாக அதைக் கூறுவேனாக: சகல ஜனங்களே, அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு சந்தேகத்தையும் கழுவியிருக்கிறது. ஆமென். எல்லா சந்தேகங்களும் சமுத்திரத்தில் மூழ்கி அகன்று போய் விட்டது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா-? உங்கள் கரங்களை தேவனை நோக்கி உயர்த்துங்கள். ‘இப்பொழுது நான் அதை ஏற்றுக்கொள்ளுகிறேன். எல்லா சந்தேகங்களும் அந்த நீரூற்றில் மூழ்கி அகன்று போய் விட்டது. நான் அவரை விசுவாசிக்கிறேன்.’ என் அன்பு ஜனங்களே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. காலையில் எங்கேயோ ஞாயிறு பள்ளி இருக்கிறது; இந்த கன்வென்சன் கூட்டத்தில் கலந்து கொள்வதில் நிச்சயம் உடையவர்களாயிருங்கள்; கர்த்தருக்குச் சித்தமானால், நான் நாளை பிற்பகலில் ‘நித்திய ஜீவன்’ என்பதின் பேரில் இங்கே பேசிக் கொண்டிருப்பேன். நான் நாளை உங்களைக் காண்பது வரை, சகோதரன் போஸ் அவர்களை மேடைக்கு. *******